‘என்ன ஓபிஎஸ் எவ்வளவு செலவு செய்வீங்க’.. நேர்காணலுக்கு தயாரான ஸ்டாலின்.. பரபரக்கும் போடிநாயக்கனூர்
சென்னை: தமிழ்நாடு அரசியல் சட்டமன்ற தேர்தலுக்காக பரபரக்க தொடங்கிவிட்டது . திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து திமுக தொகுதி பங்கீடை செய்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் விருப்பமனு அளித்துள்ள ஓ. பன்னீர்செல்வத்தை மு.க. ஸ்டாலின் இன்று நேர்காணல் செய்யவுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். மதுரையில் ஸ்டாலினை அழைத்து ஓபிஎஸ் பிரம்மாண்ட இணைப்பு விழாவை நடத்தினார். (Assembly Election 2026)

ஓ. பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் நேர்காணல்
திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தென் மாவட்டங்களில் கவனம் செலுத்த திமுக தலைமை அவரை அறிவுறுத்தியுள்ளது. அவருடன் அவரின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்துள்ளார்.
Assembly Election 2026:
திமுகவில் விருப்பமனு அளித்தவர்களுக்கு நேற்று முதல் நேர்காணல் தொடங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் சீனியர் நிர்வாகிகள் நேர்காணல் செய்து வருகிறார்கள். அதன்படி ஓ. பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் இன்று நேர்காணல் செய்யவுள்ளார். தேனி மாவட்டத்தில் விருப்பமனு அளித்வதர்களுக்கு திமுகவில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
போடிநாயக்கனூர் தொகுதி
ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்துள்ளார். அதிமுகவில் நீண்ட காலமாக கோலோச்சி எதிரும், புதிருமாக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் நேர்காணல் செய்யவுள்ளார். இதேபோல அவரின் மகன் ரவீந்திரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்துள்ளார். அவரிடமும் ஸ்டாலின் நேர்காணல் செய்வார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications