வாக்காளர்கள் கவனத்திற்கு.. வாக்குச்சாவடி மையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எவை தெரியுமா?
சென்னை: நாடே உற்று நோக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் எதை பின்பற்ற வேண்டும் எதை பின்பற்ற கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி மையங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இந்த செய்தியில் காணலாம். (Assembly Election Tamilnadu)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வாக்குசாவடியில் தடை செய்யப்பட்டவை
நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் காலை 7 மணியில் இருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றலாம். தமிழகத்தில் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 5,900 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. வாக்குச்சாவடி மையத்திற்கு பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
பொதுவாக வாக்குச்சாவடி மையத்தின் அரசியல் கட்சி அடையாளங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கரைவேட்டி, கட்சி சின்னம், கொடி, தலைவர்களின் அடையாளங்கள் (பேட்ச், போட்டோ) உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் உடை உள்ளிட்டவை வாக்குச்சாவடி மையத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த அடையாளங்களுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல அனுமதி இல்லை.
கூடவே கூடாது
இந்த தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் செல்போன் எடுத்து சென்றால், அங்குள்ள அதிகாரிகளிடம் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஒப்படைக்க வேண்டும். அதற்கு டோக்கன் வழங்குவார்கள். வாக்களித்த பிறகு டோக்கனை கொடுத்து செல்போனை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கேமரா, ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையத்திற்குள் போட்டோ வீடியோ எடுக்க தடை உள்ளது. மீறி போட்டோ, வீடியோ எடுத்தால் 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் சக வாக்காளரிடம் பிரச்சாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications