பூமிக்கு புதுமாப்பிள்ளை.. இரண்டாவது நிலவு வருது மக்களே! தேதி குறித்த விஞ்ஞானிகள்
சென்னை: பூமியை கடந்து செல்ல உள்ள விண்கல் ஒன்று தற்காலிகமாக, ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு நிலவாக மாறும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது எப்போது நடக்கும் என்பது குறித்தும் அவர்கள விளக்கியுள்ளனர்.
விண்வெளி நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரியது. இதில், நாம் வாழும் சூரிய குடும்பத்தில் நமக்கே தெரியாமல் பல பொருட்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த விண்கற்கள் இருக்கிறதே.. இதோட தொல்லை ரொம்ப அதிகம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 விண்கற்களாவது பூமிக்கு நெருக்கமாக வந்து செல்லும். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இப்படி வந்த விண்கல் ஒன்னு, பாதை மாறி பூமி மீது மோதிவிட்டது.

அதுக்கப்புறம் டைனோசர் அழிந்தது, இதர பெரிய உயிரினங்கள் அழிந்தது என நடந்த கதைதான் நம் எல்லோருக்கும் தெரியுமே. மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பை முன்கூட்டியே கணிக்க, விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பூமியை நெருக்கமாக கடக்கும் விண்கற்களை கண்காணித்து, அதன் மூலம் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் அவ்வப்போது விளக்கமளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் ஒன்று, பூமியின் நிலவாகவே மாற இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த ஆக.7ம் தேதி நாசாவின், 'ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்' எனும் வானியல் அமைப்பு மூலம் 2024 PT5 எனும் விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இது பெரிசு ஒன்றும் கிடையாது. வெறும் 33 அடி நீளம் மட்டுமே இருக்கிறது.
இது தன்னுடைய பாதையில் தேமே என்றுதான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இதன் பாதை பூமியின் சுற்றுவட்ட பாதையை ஒட்டி இருந்ததுதான் பிரச்னை. மட்டுமல்லாது பூமியின் சுற்றுவட்ட பாதையை இந்த விண்கல் கடப்பதற்கும், சரியாக அந்த நேரம் பார்த்து பூமி உள்ளே வருவதற்கும் நேரம் சரியாக இருந்திருக்கிறது.
இப்படி நடக்கும் போது சில நேரங்களில் விண்கல் பூமியில் மோதிவிடும். ஆனால், இது சைஸில் சிறியது. எனவே பூமியின் நிலவாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதாவது, பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவு எப்படி நம்மை சுற்றி வருகிறதோ.. அதேபோல இந்த விண்கல்லும் நம்மை சுற்றி வரும். ஆனால் கொஞ்ச நாளைக்கு மட்டுமே.
செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை, இரண்டு மாதங்கள் வரை மட்டுமே இந்த விண்கல், பூமியின் நிலவாக சுற்றி வரும். அதன் பின்னர் அது தன்னுடைய பாதையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டு நகர்ந்து போய்விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதை வெறும் கண்களால் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
என்ன மக்களே பூமிக்கு வரும் புது மாப்பிள்ளையை வரவேற்க தயரா?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications