செம.. கோவிஷீல்ட் போட்டுபின் ஃபைசர் வேக்சின் போட்டால்.. சூப்பர் எதிர்ப்புசக்தி கிடைக்குமாம்.. ஆய்வு
லண்டன்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு பின் இரண்டாவது டோஸாக ஃபைசர் வேக்சின் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் வேக்சின் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து இந்த வேக்சினை உருவாக்கியது.
இந்த நிலையில் கலவையான வேக்சின் பயன்படுத்தி குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது முதலில் ஒரு வகையான வேக்சினை போட்டுவிட்டு, பின் வேறு வேக்சினை போட்டால் என்ன ஆகும் என்று ஆராய்ச்சி நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஏன்
உலகம் முழுக்க பல நாடுகளில் வேக்சின் தட்டுப்பாடு உள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரந்துபட்ட வேக்சின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், கலவையான வேக்சின் பயன்பாடு குறித்த ஆராய்ச்சியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செய்தது. ஒரு வேக்சினை முதல் டோஸாக பயன்படுத்திவிட்டு, அடுத்த டோஸாக வேறு வேக்சினை பயன்படுத்தினால் பெரிய அளவில் தட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தபடும் என்பதால் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இது தொடர்பாக நடத்திய சோதனையில் கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு பின் இரண்டாவது டோஸாக ஃபைசர் வேக்சின் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே சோதனை ஃபைசர் வேக்சின் போட்டுவிட்டு பின்னர் கோவிஷீல்ட் போட்டாலும் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆனால் கோவிஷீல்ட் அதன்பின் ஃபைசர் போட்டால்தான் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

இரண்டு
இரண்டு டோஸ் கோவிஷீல்ட் போடுவதை விட ஒரு டோஸ் கோவிஷீல்ட் பின்னர் ஃபைசர் டோஸ் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதாம். இந்த டோஸ்களுக்கு இடையில் 4 வாரம் இடைவெளி விட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உடலில் உருவாகும் டி செல்கள், கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு
இதனால் வேக்சின் தட்டுப்பாடு உள்ள நாடுகள் இந்த பயன்பாட்டு முறையை முயன்று பார்க்கலாம் என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மொத்தம் 830 பேரிடம் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர். வுஹனில் முதலில் பரவிய கொரோனா வகை வைரஸிடம் மட்டுமே இந்த வேக்சின் சோதனை செய்யப்பட்டுள்ளது. வரும் கால சோதனைகள் மற்ற வகை கொரோனாவிடம் எப்படி எதிர்ப்பு சக்தி கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும்.

மாடர்னா
அதேபோல் மாடர்னா, நோவாவாக்ஸ் வேக்சினை இதேபோல் மாற்றி மாற்றி கொடுத்து ஆராய்ச்சி செய்ய உள்ளனர். லண்டனில் தற்போது கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையில் 12 வாரம் இடைவெளி விடப்பட்டுள்ளது. வேக்சின் டோஸ்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டால் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 10 மாதங்கள் வர இடைவெளி விடலாம், இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆக்ஸ்போர்ட் கூறியுள்ளது.

நிலை என்ன
அதேபோல் கோவிஷீல்ட் மற்றும் ஃபைசர் டோஸ்களை 12 வார இடைவெளியில் போட்டு சோதனை செய்யும் முடிவிலும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. அதே சமயம் கோவிஷீல்ட் மற்றும் ஃபைசர் வேக்சினை மாற்றி மாற்றி போட்டால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், அதே சமயம் தலைவலி உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் வரும், ஆனால் இவர் விரைவில் சரியாகிவிடும் என்று மருத்துவ ஆராய்ச்சி வார இதழான லான்செட் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications