சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மழைக்காக யாகம் நடத்தும் நேரத்தில் 10 மரக்கன்றுகளை நடலாம்... சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: மழைகாக யாகம் நடத்தும் நேரத்தில் பத்து மரக்கன்றுகளை நடலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.

At the time of the Special yagam, instead ten saplings can be planted Says Seeman

இதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை விமர்சிக்கும் விதமாக பேசியுள்ள சீமான், மழைகாக யாகம் நடத்தும் நேரத்தில் பத்து மரக்கன்றுகளை நடலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவையொட்டி, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடந்த வீரவணக்கம் நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர் என கூறினார்.

தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியது, வரலாற்று ரீதியாக உண்மை தான் என்றும் சீமான் தெரிவித்தார். நமது கவனத்தை திசை திருப்பி 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பேச யாரும் இல்லை என்றும் கூறியுனார்.

முன்னதாக, எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டு தான். நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பது தான் என்று பேசினார்.

English summary
Seeman Said that Kamal Haasan's opinion is politically motivated
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X