மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா, அபய் குமார் சிங்.. ஆளுநர் ரவி முன்னிலையில் பதவியேற்பு!
சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா, அபய் குமார் சிங் ஆகியோரை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்ட நிலையில், அவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னையில் உள்ள நந்தனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2வது மேல்முறையீடு மற்றும் புகாரை விசாரிக்கும் அமைப்பாக உள்ளது. அதோடு இந்த ஆணையத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றப்படாதது குறித்து விசாரிக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 மாநில தகவல் ஆணையர்களைக் கொண்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. மாநில தகவல் ஆணையத்தில், தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட, ஆறு ஆணையர் பதவிகள் உள்ளன. புதிதாக இரண்டு தகவல் ஆணையர் பதவிகளை, அரசு உருவாக்கியுள்ளது.
இந்த பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூன்று ஆண்டுகள் வரை, இந்தப் பதவியில் இருப்பார்கள். ஆளுநர் ரவி பரிந்துரைப்படி, இந்த உத்தரவை, மனிதவள மேலாண்மை துறை செயலர் சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications