இந்தியா மட்டும் இல்லை.. சுதந்திர தினத்தை வேறு எந்த நாடெல்லாம் இன்று கொண்டாடுதுன்னு தெரியுமா? லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா இன்று தனது 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து போராடி சுதந்திரத்தை பெற்ற தினத்தை சுதந்திர தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்தியா மட்டுமின்றி மேலும் 5 நாடுகள் இதே ஆகஸ்ட் 15 ஆம் தேதியினை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறார்கள். அது எந்தெந்த நாடுகள் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்தியா இன்று தனது 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய அந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுவார்.

independence day 2024 independence day world 2024

சுதந்திர தினம்: அதேபோல மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்துவார்கள். இந்தியா தனது 78-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தன்று நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்கிறோம்.

நமது மூவர்ணக் கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடி சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. மாவட்ட தலைநகரங்கள், பள்ளி, கல்லூரிகள் என நாடு முழுக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த இதே நாளில் வேறு எந்தெந்த நாடுகள் எல்லாம் சுதந்திர தினம் கொண்டாடுகிறது தெரியுமா? அது பற்றிய விவரத்தை இதோ பார்க்கலாம்..

* தென் கொரியா: ஆசியாநாடுகளில் ஒன்றான தென் கொரியாவும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை நாளை கொண்டாடுகிறது. Resotration of light Day என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் கொண்டாடுகிறது. ஜப்பான் ஆட்சியில் இருந்து 1945 ஆம் ஆண்டு விடுபட்டதை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தென்கொரியா நாடு கொண்டாடி வருகிறது.

* வடகொரியா: வடகொரியாவும் இதேநாளில் ஆகஸ்டு 15 ஆம் தேதியில் விடுதலை நாளை கொண்டாடுகிறது. ஜப்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டதை நினைவு கூரும் விதமாக இந்த நாளை வடகொரியா கொண்டாடுகிறது. இந்த சமயத்தில் கொரிய தீபகற்பம் ஒருங்கிணைந்த நாடாக இருந்தது. 1951 ஆம் ஆண்டுதான் வடகொரியாவும் தென் கொரியாவும் நிரந்தரமாக பிரிந்தது.

* காங்கோ குடியரசு: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. ஆப்பிரிக்கா கண்டத்தின் நடுப்பகுதியில் இந்த நாடு அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக இது உள்ளது. பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காங்கோ 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை பெற்றது. பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் காங்கோ குடியரசு கொண்டாடி வருகிறது. 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த நாட்டில் சுமார் 10 கோடி மக்கள் வசிக்கிறர்கள்.

* பஹ்ரைன்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று பஹ்ரைன். வளைகுடாவில் உள்ள மேற்கு ஆசியத் தீவு நாடான பஹ்ரைனின் அண்டை நாடுகளாக ஈரானும் கத்தாரும் உள்ளன. முடியாட்சி நடைபெற்று வரும் பஹ்ரைன் நாடானது 1971 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த நாடு விடுதலை பெற்ற போதிலும் டிசம்பர் 16 ஆம் தேதியன்றுதான் தேசிய நாளாக கடைப்பிடித்து பிரமாண்டமாக கொண்டாடுகிறது.

* லீக்கின்ஸ்டைன்: ஐரோப்பாவில் உள்ள லீக்கின்ஸ்டைன் ஒரு அரசியல் சட்ட முடியாட்சி நாடாகும். அளவில் மிகச்சிறிய நாடான இந்த நாட்டில் 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 39,327- பேர் மட்டுமே வசிக்கிறார்கள். சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகள் அருகே அமைந்துள்ளன. இந்த நாடு தனது தேசிய தினத்தை ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15-ல் கொண்டாடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+