வந்துருச்சு "ஆட்டோ ஆம்புலன்ஸ்".. அசத்தும் வட சென்னை வாலிபர்கள்.. வீடு தேடி வரும் ஆக்சிஜன்!
ஆக்ஸிஜன் ஆட்டோ ஆம்புலன்ஸ் சென்னையில் அறிமுகமாகி உள்ளது
சென்னை: வடசென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட "ஆட்டோ ஆம்புலன்ஸ்" அறிமுகப்படுத்தி, இருக்கிறார்கள்.. இந்த ஆட்டோதான், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
தமிழகத்தில் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.. இதில் சென்னை நிலைமை மோசமாக உள்ளது... நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடியே வருகிறது.
இதனால் ஆஸ்பத்திரிகள் நிறைந்து வழிகின்றன.. ஒருபுறம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும், இன்னொரு புறம்
தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி வருகிறார்கள்.

பாதிப்பு
மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவையும் அதிகரித்தபடியே உள்ளது.. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள்.. இவர்களில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுவிடுகிறது.. அவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதற்குள் சிலர் உயிரிழந்துவிடும் சோகமும் நடக்கிறது.. இதுபோன்றவர்களுக்கு அவசரத்துக்கு ஆம்புலன்சுகளும் கிடைப்பதில் சிரமம் உள்ளது..

வடசென்னை
இப்படிப்பட்ட சூழலில்தான், கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் வடசென்னையை சேர்ந்த 2 பட்டதாரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்தி உள்ளனர்... இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.. இதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர்... மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளை இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில் வைத்து, உடனடியாக ஆக்சிஜன் உதவியுடன் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து வருகின்றனர்..

இலவசம்
இதை இலவசமாகவே செய்கின்றனர்.. கட்டணம் எதுவும் இல்லை. இதை பற்றி வடசென்னையை சேர்ந்த இளைஞர்கள் சொல்லும்போது, வடசென்னை மக்களின் பயன்பாட்டிற்காகவே இப்படி ஒரு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி இருக்கறோம்.. இந்த 2 வாரங்களாகவே ஆட்டோ ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. எந்த நேரமும் செயல்படும் வகையில், இரண்டு ஆக்சிஜன் ஆட்டோ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது..

அசத்தல்
ஒருநாளைக்கு 150 முதல் 200 அழைப்புகள் வருகின்றன... இதன் மூலம் 20 முதல் 30 பேர் வரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறோம். இதுவரை 126 பேரின் உயிர்களை காப்பாற்றியும் இருக்கிறோம்.. கொரோனா நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்த்த பிறகு, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்கிறோம்... அதனால் யாரும் பயப்பட வேண்டியதில்லை" என்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications