Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பின் இருக்கையில் இளம்பெண்.. பைக் டாக்ஸி இளைஞரை மறித்து ஆட்டோ டிரைவர் செய்த செயல்.. கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக் டாக்ஸி சேவைகளுக்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர். பைக் டாக்ஸியால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி இயங்கும் பைக் டாக்ஸி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு பைக் டாக்ஸியில் சென்ற இளைஞரை வீடியோ எடுத்த வழிமறித்து ஆட்டோ டிரைவர் செய்த செயல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி சேவை என்பது நடைமுறையில் உள்ளது. ரேபிடோ, ஓலா உள்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட பிற முக்கிய நகரங்களில் இந்த சேவை அமலில் உள்ளது.

Auto driver stops and threaten to bike taxi driver who ride with woman video shared in social media


பொதுவாக ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்துக்கு பஸ்சில் செல்ல வேண்டும் என்றால் நீண்டநேரம் எடுக்கும். ஆனால் கட்டணம் குறைவு. மாறாக குறைந்த நேரத்தில் பயணிக்க வேண்டும் என்றால் ஆட்டோவில் செல்லலாம். ஆனால் கட்டணம் அதிகம். இந்நிலையில் தான் ஒருவர் மட்டும் பயணிக்க வசதியாக பைக் டாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது பைக் டாக்ஸி என்பது ஓலா, ரேபிடோ போன்று நாம் முன்பதிவு செய்தால் போதும். பைக் ஓட்டும் நபர் நாம் இருக்கும் இடத்துக்கே வந்து ‛பிக்அப்’செய்து நாம் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடுவார். பைக் டாக்ஸி சேவையில் ஆட்டோ கட்டணத்தை விட குறைவாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதோடு ஆட்டோவை விட விரைவாகவும் பயணிக்க முடிகிறது. இதனால் தனி ஆளாக எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் பலரும் பைக் டாக்ஸியை பயன்படுத்தி கொள்கின்றனர்.

பைக் டாக்ஸியால் வெளிவந்த உண்மை.. சென்னை கமிஷனர் ஆபிஸில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்


இதனால் ஆட்டோ டிரைவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தனியாக செல்வோர் ஆட்டோவுக்கு பதில் பைக் டாக்ஸியை தேர்வு செய்யும் நிலையில் தான் ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானமும் சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் வேதனையுடன் புகார் அளித்துள்ளனர். அதில், "பைக் டாக்ஸிக்கு இந்தியா முழுவதும் எங்குமே அனுமதி இல்லை.. இந்த பைக் டாக்ஸியால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டாக்ஸியால் நிறைய மரணங்கள் நடந்துள்ளது. பாலியல் தொல்லைகள் நடந்துள்ளன.

முறையான அனுமதியின்றி பைக் டாக்ஸி ஓட்டு எங்களை நசுக்கின்றனர். பைக் டாக்ஸிக்கு அனுமதியே இல்லாத நிலையில் அதில் 2 பேரை ஏற்றிச்செல்கிறார்கள்.. பெர்மிட்டே இல்லாமல் இந்த வேலையை செய்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

பைக் டாக்ஸி குறித்து புகார் அளித்த ஆட்டோ டிரைவர்கள்.. வெகுண்டெழுந்த நெட்டிசன்கள்.. இவ்வளவு கோபமா?


இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் இளைஞர் ஒருவர் பைக் ஓட்டுகிறார். அவருக்கு பின்னால் இளம்பெண் ஒருவர் இருக்கிறார். அவர்கள் செல்லும் பைக்கை ஆட்டோ ஒன்று பின்தொடர்ந்து வீடியோ எடுத்து செல்கிறது. அதோடு பைக்கின் அருகே சென்று ஆட்டோ ஓட்டியவர் அந்த இளைஞரை பார்த்து, ‛‛பைக் டாக்ஸி தானே ஓட்டுகிறாய்’’ என கேட்கிறார். இதையடுத்து அந்த இளைஞர் பைக்கை வழியில் நிறுத்துகிறார்.

இதையடுத்து ஆட்டோவில் இருந்து இறங்கிய டிரைவர் வீடியோ எடுத்தபடியே, ‛‛பைக் டாக்ஸி தானே ஓட்டுகிறாய். பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி இருக்கா?, பைக் டாக்ஸி அனுமதி வாங்கியதை காட்டு’’ என காட்டமாக சொல்கிறார். மேலும் பின்னால் இருக்கும் இளம்பெண்ணை பார்த்து, ‛‛எங்கம்மா போற.. யாருமா இவரு?’’ என கேட்கிறார். அதற்கு அந்த இளம்பெண் வேறு மொழியில் பதிலளித்தபடி முன்னோக்கி சைகை காட்டுகிறார். இருப்பினும் விடாத ஆட்டோ டிரைவர், ‛‛யாரு கூடவோ பைக்கில் ஏறி செல்கிறியே? உனக்கு பாதுகாப்பு இருக்கா?’’ என கேள்வி கேட்கிறார். அதற்கு பைக் ஓட்டிய இளைஞர், ‛‛ரேபிடோ அண்ணா.. ஏன் அண்ணா இப்படி கேள்வி கேட்கிறீங்க’’ என கேட்கிறார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

இந்த வீடியோ இப்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதாவது ஒருவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்து நடுவழியில் தடுத்து நிறுத்தி இரவு நேரத்தில் கேள்வி கேட்டது தவறு. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+