சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவசர சட்டத்துக்கு அவசரம் காட்டாத ஆளுநர்.. நடிகர்கள் காட்டிய ஆசை! ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மணலி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி துர்கா (வயது 24) என்ற மனைவியும் கவிசினி (வயது 3) மற்றும் கனிஷ்கா வயது ஒன்றை இரண்டு என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஆன்லைன் மூலம் பார்த்திபன் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஆரம்பத்தில் வெற்றி பெற்று வந்ததால் அந்த மோகத்தில் தொடர்ந்து விளையாடி உள்ளார்.

காலாவதியான ஆன்லைன் ரம்மி தடை மசோதா..ஆளுநர் ஆர்என் ரவியை நாளை சந்திக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி! ஏன்?காலாவதியான ஆன்லைன் ரம்மி தடை மசோதா..ஆளுநர் ஆர்என் ரவியை நாளை சந்திக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி! ஏன்?

பணம் நஷ்டம்

பணம் நஷ்டம்

ஒரு கட்டத்தில் பணத்தை இழக்கவே அந்த பணத்தை மீட்க தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் வைத்து விளையாடி அதையும் இழந்து உள்ளார். மீண்டும் கடன் வாங்கி ரம்மியை தொடர்ந்த பார்த்திபன் அதனையும் இழந்து
கடைசியாக கடன் வாங்கி விளையாடிய 45 ஆயிரம் ரூபாயையும் இழந்து நஷ்டம் அடைந்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பார்த்திபன் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர்,
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் கோரிக்கை

தாய் கோரிக்கை

பார்த்திபனின் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்த சூழ்நிலையில் இவரது இழப்பு குடும்பத்தை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆன்லைன் ரம்மி தடைக்கால அவசர சட்டம் விரைவில் அமல்படுத்த வேண்டுமெனவும் அப்படி நடந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் எனவும் அவரது தாயார் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

அவசர சட்டம்

அவசர சட்டம்

இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தார் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அளிப்பு வைக்கப்பட்டு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

 தொடர் தற்கொலை

தொடர் தற்கொலை

அண்மையில் இந்த சட்டம் காலாவதியானது. தொடர் தற்கொலை. இதே போன்று மணலி பகுதியில் பவானி என்கின்ற பெண்மணி ஒருவர் ஆன்லைன் ரம்மி மூலம் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தென்காசி அருகே வடமாநில பெண் ஒருவர் இதே காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
An auto driver in chennai who lost money by playing online rummy and committed suicide has created a sensation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X