சென்னையில் எங்கு திரும்பினாலும் ஸ்டாக் இல்லை.. கியாஸ் தட்டுப்பாடு.. ஆட்டோ டிரைவர்கள் பரிதவிப்பு
சென்னை: சென்னை நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவதற்கு போக்குவரத்து போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள கியாஸ் நிரப்பும் மையங்களில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் உள்பட வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.
சென்னையில் முன்பு போல் இல்லை.. பெரும்பாலான வாகனங்கள் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தால் இயங்குவது அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டர் போட்டு தான் கார்கள் பல ஓடுகின்றன. அதேபால் பல எரிபொருளுக்கான செலவை குறைப்பதற்காக சென்னையில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்கள் இயற்கை எரிவாயுவை தான் பயன்படுத்தி வருகின்றன.

சென்னையில் பீக் அவர்ஸ் எனப்படும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை உள்ளது. அதேநேரம் எரிபொருள் விநியோகிக்கும் லாரிகள், தண்ணீர் லாரிகள் மட்டும் நகருக்குள் வந்து சென்றன. இந்நிலையில் சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் சவுமியா என்ற 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்றபோது குடிநீர் வாரிய ஒப்பந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவதற்கு போக்குவரத்து போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் அந்த பகுதி காவலர்கள் தான் அதற்கு பொறுப்பாக்கப்படுகிறார்கள்.இதனால் போக்குவரத்து காவலர்கள் நகருக்குள் கனரக வாகனங்களை சுத்தமாக அனுமதிப்பது இல்லை..
இதனால் அண்டை மாவட்டங்களில் இருக்கும் உற்பத்தி நிலையங்களில் இருந்து சென்னை நகருக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (சி.என்.ஜி.) லாரிகளில் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. நேரக்கட்டுப்பாடு முடிவடையும் வரையிலும் நகரின் வெளியே எரிவாயு உடன் டேங்கர் லாரிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றன. இதனால் நகருக்குள் இருக்கும் கியாஸ் நிரப்பும் மையங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இருப்பு இருக்கும் எரிவாயுவை நிரப்புவதற்காக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. பல்வேறு மையங்களில் இயற்கை எரிவாயு ஸ்டாக் இல்லை என்று போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரிக்கு செல்லமுடியாமல் அவதிப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். அத்தியாவசிய பொருளான எரிவாயுவை கொண்டு வரும் டேங்கர் லாரிகளை நகருக்குள் அனுமதிக்கும் வகையில் நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications