ஆரம்பமே 50 ரூபாய்.. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடியாக உயர்கிறது! எவ்வளவு? முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வதாக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், ஓட்டுநர்கள் சார்பில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 1.8 கிமீ-க்கு 50 ரூபாயும், கூடுதல் தூரம் செல்ல ஒரு கிமீ-க்கு ரூ.18 என்ற வகையில் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ஆட்டோக்களில் பயணிப்பதை பார்க்க முடியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ் இல்லை என்றால் உடனே ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து அதில் பயணம் செய்கிறார்கள்.

அதேபோல, கிரமங்களிலும் பேருந்து வசதி இல்லையென்றாலோ, அவசர தேவைக்கோ ஆட்டோக்களையே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்டோக்களை பொறுத்தவரை கட்டணம் சில நேரங்களில் அதிகப்படியாக வசூலிப்பதாகவும் பயணிகள் தரப்பில் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் மிக அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
ஓலா, உபேர் போன்ற செயலிகளில் புக் செய்தாலும் கூட கூடுதலாக கட்டணத்தை கொடுக்க ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்துவதாகவும் பயணிகள் முன்வைக்கும் புகாராக உள்ளது. அதேவேளையில், 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அரசு கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் கூறும் கருத்தாக உள்ளது. கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்பிறகு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் மாற்றி அமைக்கப்படவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறி வருகிறார்கள். தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 12 வருடங்களாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படமால் உள்ளது. இதனால், ஆட்டோ டிரைவர்கள் சார்பில் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். 50 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 வசூலிக்கப்படும்.
வெயிட்டிங் சார்ஜ்க்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1.50 வசூலிக்கப்படும். இரவு 11 மணி முதல் 5 மணி வரையிலான சேவைக்கு 50 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இந்த கட்டண அடிப்படையில் தான் இயக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உரிமைக்குரல் டிரைவர் தொழிற்சங்க செயலாளார் ஜாகீர் உசைன் கூறுகையில், " விலை வாசி உயர்வு, ஆர்.டி.ஓ செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் டிரைவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்த பிறகும் கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி அதிகரிப்பால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. மத்திய அரசு செய்வது சதி.. ப சிதம்பரம் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications