வண்டலூர் டூ மீஞ்சூர் ரோட்டில்.. அதிகாலையில் ஆட்டோவில் சல்லுனு போறது யார் பாருங்க.. சென்னையிலா இப்படி
சென்னை: வண்டலூர் டூ மீஞ்சூர் ஹைவேஸில் நடந்த சம்பவம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.
சென்னை வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 60.5 கிமீ தூரத்துக்கு வெளி வட்டச்சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது... எனவே, மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எந்தவிதமான தடையுமின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள்: அத்துடன் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் விசாலமாக ஒதுக்கப்பட்டுள்ளது.. எனவே சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்..
இப்படி நெரிசல் இல்லாமல் உள்ளதுதான், சில நேரத்தில் வினையை தந்துவிடுகிறது.. வாரவிடுமுறை நாட்களில் இந்த சாலைகளில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ்கள் நடக்கின்றன. போலீசார் எவ்வளவுதான் நடவடிக்கைகளை எடுத்தாலும்கூட, ரேஸ்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. 3 நாளைக்கு முன்புகூட மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஒரு விபத்து நடந்து 2 பேர் இறந்துவிட்டார்கள்.
சோழவரம்: சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் விடிகாலையில், பைக் மோதியதில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்... 3 பேர் படுகாயமடைந்தனர்.. எனவே, இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தினர்.. இதற்காக அங்கிருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், விபத்து நடந்த நேரத்தில் ஆட்டோ ரேஸ் நடந்திருப்பது தெரியவந்தது.
மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்துள்ளது.. இந்த ஆட்டோவுக்கு பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட பைக்குகளில் இளைஞர்கள் கத்தி கூச்சலிட்டபடி செல்வதும் பதிவாகியிருந்தது.. இப்படி ரேஸ் நடந்தபோதுதான், ஆட்டோ ஒன்று கவிழ்ந்து, அதற்குபிறகு ஒவ்வொருவராக பைக்கில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில்தான் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
கோரிக்கை: இந்த ஆட்டோ ரேஸ் நடக்கும்போது, பைக்கில் சென்ற ஒரு இளைஞர், தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.. அதுதான் தற்போது சோஷியல் மீடியாவிலும் பரவி வருகிறது.. அந்த வீடியோவில் ஆட்டே ரேஸ் சீறிப்பாய்வதை பார்த்தாலே குலைநடுங்குகிறது.. எனவே, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், இதுபோன்ற ஆபத்தான ரேஸ்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை வெளிவட்ட சாலையில், செங்குன்றம் அருகே அருமருந்தையில் இந்த ஆட்டோ ரேஸ் நடந்திருக்கிறது.. செங்குனறம் அருகே வந்தபோதுதான் ஆட்டோக்கள் ஒன்றொடொன்று மோதி பாதுகாப்பு மற்றும் வேடிக்கை பார்க்க பைக்கில் வந்தவர்கள் மீது மோதியிருக்கிறது.. அதாவது, 8 ஆட்டோக்கள், 20 பைக்குகள் சீறிப்பாயும் சாலையில், 2 கார்களும் பின்னாடியே சென்றிருப்பதும் சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications