அசத்தும் சென்னை ஆட்டோ டிரைவர்கள்.. விவசாயிகள் போராட்டத்திற்கு எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் பாருங்க!
சென்னை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள், போஸ்டர்களை ஒட்டி புது வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
விவசாயிகள் இந்நாட்டின் முதுகெலும்பு. மத்திய மாநில அரசுகளை விவசாயி கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள் என்று அடையாறில் உள்ள ஆட்டோ சங்கத்தினர் தங்கள் ஆட்டோ பின்னால் ஒட்டியுள்ளனர்.
Recommended Video

3 விவசாய சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் இவ்வாறு நூதன பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

ரீச் அதிகம்
நகரம் முழுக்க ஆட்டோக்கள் இயங்கும் என்பதால், அதிகப்படியான மக்களை எளிதாக சென்று சேர இந்த விளம்பர யுக்தி பயன்படும் என்பது அவர்கள் நம்பிக்கை. நீங்களும் அந்த படங்களை பாருங்கள்.

பேச்சுவார்த்தைகள்
விவசாய சங்கத்தினர், மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது கோரிக்கை.

திருத்தங்கள்
அதேநேரம், திருத்தங்கள் செய்ய தயார். சட்டத்தை ரத்து செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

டெல்லி போராட்டம்
கடும் குளிரிலும், விவசாயிகள் கூடாரங்கள் அமைத்தும், லாரிகள் மற்றும் டிராக்டர்களிலும் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்து சாப்பிடுகிறார்கள். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குத் தேவையான பொருட்களுடன் வந்திருப்பதாக கூறுகிறார்கள். உள்ளூர் மக்களும் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications