நண்பன் மனைவியுடன் தனிக்குடித்தனம்.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ஆத்திரத்தில் இருவர் கொலை!
சென்னை: ஆவடி அருகே மது விருந்து நடந்த இடத்தில் இரட்டை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் கொலை செய்ததற்கான காரணத்தையும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (30). ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (30). இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டில் வெவ்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போது இவர்கள் ஒரே சிறையில் இருந்ததால் நண்பர்களானார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் ஆவடியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெகன், அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்தார்.

ஜெகன் மனைவி
அப்போது ஜெகனுக்கும் மணிகண்டன் மனைவி பிரெசில்லாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி ஜெகன் , பிரெசில்லாவை அழைத்துக் கொண்டு தன்னுடனேயே வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன், கணவனை இழந்த மாலதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜெகனுடன் சென்ற பிரெசில்லா
தனது மனைவியை ஜெகன் அழைத்து சென்றுவிட்டதால் அவருடன் மணிகண்டனுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

நிர்வாண படம்
அப்போது ஜெகன் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே இந்த வீடியோவை டெலிட் செய்துவிடுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஜெகனை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து இரவு 10 மணிக்கு ஜெகன் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்ளிட்டோருடன் உட்கார்ந்து ஆவடி பேருந்து நிலையம் அருகே மது அருந்தி கொண்டிருந்தார்.

மது விருந்து
இதையறிந்து கொண்ட மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் ஆவடி பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்றுள்ளனர். இவர்களை பார்த்தும் ஜெகன் உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்தனர். ஆனால் தொடர்ந்து மது அருந்தி கொண்டிருந்த ஜெகனின் நண்பர்கள் அசாருதீன், சுந்தர் ஆகியோரை மணிகண்டனின் கூட்டாளிகள் வெட்டி சாய்த்தனர்.

இரட்டை கொலை
இதையடுத்து அவர்களது முகத்தையும் சிதைத்து விட்டு சென்றுவிட்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications