மாயமான நிறைமாத கர்ப்பிணி.. காட்டிக்கொடுத்த 2 விஷயங்கள்.. 10 மணி நேரத்தில் மீட்ட ஆவடி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜலட்சுமி (30) என்ற பெண் இரட்டை குழந்தைகளுடன் உள்ள நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் திடீரென மாயமானார். அவரை ஆவடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி 10 மணி நேரத்தில் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதயகுமார் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமி திடீரென காணாமல் போனார். இன்று பிரசவ அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில பயந்துகொண்டு மாயமானாரா என்று அதிர்ச்சியுடன் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்தனர்.ஆனால் எங்குமே அவர் இல்லை. உறவினர்கள் வீடுகளிலும் இல்லை.

இரட்டை குழந்தைகளை சுமந்துள்ள ராஜலட்சுமிக்கு மருத்துவமனையில் இன்று பிரசவ தேதி உள்ள நிலையில், கடத்தப்பட்டுள்ளாரா அல்லது யாரேனும் தெரிந்த நபருடன் சென்றாரா என்கிற கோணத்தில் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.

தேடினர்

தேடினர்

இதையடுத்து ராஜலட்சுமியின் கணவர் உதயகுமார் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் மனைவி மாயமானது குறித்து புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ராஜலட்சுமியின் உறவினர்கள் மற்றும் உதயகுமாரின் உறவினர்கள் என அனைவரும் மருத்துவமனையில் பதற்றத்துடன் தேடி வந்தனர்.

தனிப்படை போலீஸ்

தனிப்படை போலீஸ்

இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னேரியில் தனது தோழி வீட்டில் பதுங்கியிருந்ததை ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான 12 பேர் கொண்ட தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன் 4:00 மணிக்கு கண்டுபிடித்தனர்.

பென்னேரி வரை ஆய்வு

பென்னேரி வரை ஆய்வு

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் சிசிடிவி காட்சிகளை அம்பத்தூரில் இருந்து செங்குன்றம் பொன்னேரி வரை ஆய்வு செய்து செல்போன் சிக்னலை ஆய்வு செய்து துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

தற்பொழுது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கணவர் மற்றும் தாய் தந்தையுடன் அப்பெண் ஒப்படைக்கப்படுகிறார். பிரசவத்திற்கு பயந்து மருத்துவமனையில் இருந்து சென்றாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+