Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டுன்னு தரையை, தொட்டு தொட்டு பார்த்த பிரியா.. அதுவும் காலங்காத்தாலயே.. அண்ணாநகர் "ஆ".. சபாஷ் மேயர்

சென்னை அண்ணாநகரில் நடந்து வரும் சாலை பராமரிப்பு பணிகளை மேயர் பிரியா திடீர் ஆய்வு செய்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணாநகரில் விடிகாலையில், திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியாவின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது..

சமீபகாலமாகவே, பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வருகிறார் சென்னை மேயர் பிரியா.. மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, சென்னைவாசிகளிடம் பரவலாக வரவேற்பையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் சென்னையில் மழை வெள்ளத்தின்போது, நள்ளிரவு என்றும் பாராமல், ஸ்பாட்டுக்கே சென்று ஆய்வு நடத்தி அசரடித்தார்.. மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகள் மக்களை திரும்பி பார்க்க வைத்தன..

 கலக்கல் பிரியா

கலக்கல் பிரியா

எந்த அளவுக்கு மேயர் பிரியாவுக்கு வரவேற்புகள் இருக்கிறதோ, அதே அளவுக்கு சோஷியல் மீடியாவில் பரபரப்புகளும் எகிறி கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எத்தகைய விமர்சனங்கள் தன்மீது எழுந்தாலும், அத்தனையையும் அசால்ட்டாக கடந்து சென்று தன் பணியில் குறியாக இருக்கிறார் பிரியா.. இதற்காக கால நேரம் என்றெல்லாம் இவர் பார்ப்பதில்லை.. இப்படித்தான், கடந்த மாதம், ராயபுரம் பகுதியில் உள்ள சமையல் கூடத்திற்கு ஆய்வுக்கு சென்றுள்ளார்... அதுவும் காலை 6 மணிக்கே சென்றுவிட்டார்.. திடீரென அந்த கிச்சனுக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ஊழியர்கள் பரபரப்பாகிவிட்டார்கள்..

 கிளாஸ்ரூம்ஸ்

கிளாஸ்ரூம்ஸ்

அதிலும் ஒரு கிளாஸ் ரூமுக்குள் சட்டென நுழைந்த பிரியா, மாணவ, மாணவிகளுடன் பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டார். மாணவ, மாணவிகள், மேயர் பிரியாவை பார்த்ததுமே திகைத்து போய்விட்டனர்.. எனினும், ஆசிரியர்கள் பாடத்தை தொடர்ந்து நடத்தி கொண்டிருந்தனர்.. அவர்கள் நடத்தும் பாடத்தை பிரியாவும் கவனித்தார்... பிறகு, சிறந்த முறையில் எல்லா பாடங்களும் நடத்தப்படுகிறதா? என்று பக்கத்தில் இருந்த மாணவர்களிடம் கேட்டறிந்தார்.. இப்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் திடீர் விசிட் செய்வது மேயர் பிரியாவின் முக்கிய கடமையாக இருந்து வருகிறது.

 அதிகாலை விசிட்

அதிகாலை விசிட்

இன்றுகூட, விடிய விடிய நடந்த சாலைப்பணிகளை, விடிகாலையில் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்.. அதாவது, சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 15 மண்டலங்களிலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் 153 சிப்பங்களாக 370 சாலைகள் 71.09 கி.மீ நீளத்தில் ரூபாய் 35.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைக்கப்படும்போது, ஏற்கெனவே பழுதான சாலைகளின் மேற்பரப்பு அகழ்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் தார்ச்சாலை உரிய அளவீடுகள் மற்றும் தரத்துடன் அமைக்கப்படுகிறது.

 ஸ்பாட்டில் மேயர்

ஸ்பாட்டில் மேயர்

ஆனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சாலைகளில், இரவு நேரங்களில் மட்டுமே சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.. அதனால்தான், விடிய விடிய இந்த பணிகள் துரிதமாக நடக்கின்றன.. இதன்காரணமாகவே பிரியாவும், விடிகாலை நேரத்திலேயே அங்கு சென்று பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, நேரடியாகவே ஆய்வு மேற்கொண்டார்.. அந்தவகையில், சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை போடும் பணியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

 தொட்டு பார்த்த பிரியா

தொட்டு பார்த்த பிரியா

அப்போதுதான் தார்கள் சாலையில் பூசப்பட்டுள்ள நிலையில், அவைகளை தொட்டுப்பார்த்தும், வெப்பநிலை குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, "சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் முறையாக போடப்படுகிறதா, வெப்பநிலை, பிட்மென், சாலையின் தடிமன் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மூலமாக 1,157 சாலைகள் ரூ.124 கோடி மதிப்பீட்டில் போடப்பட உள்ளன.

 சபாஷ் பூரிப்பு

சபாஷ் பூரிப்பு

632 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. சிங்கார சென்னை திட்டம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பி.ஆர்.ஆர் கீழ் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் 3 பணிகள் முடிவு பெற்றுள்ளன. 7 பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 18 பணிகள் நடைபெற உள்ளன. உட்புறச்சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது" என்றார். விடிகாலை நேரத்தில் மேயர் மேற்கொண்ட இந்த திடீர் ஆய்வு வீடியோதான் இணையத்தில் சென்னைவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+