லுங்கியில்.. தூக்கு போட்டு தொங்கிய பழனி.. அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி.. புழலில் பரபரப்பு!
அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: மொட்டைமாடி, லிப்ட், டாய்லெட், என இழுத்துகொண்டு போய் அயனாவரம் சிறுமியை பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பழனி தற்கொலை செய்து கொண்டார்.. புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனி, தன்னுடைய லுங்கியாலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத, நினைத்தாலே நெஞ்சில் ஈட்டியால் குத்தக்கூடிய சம்பவம் என்றால் அது அயனாவரம் சிறுமியின் கொடூரம்தான்.. வாய் பேச முடியாத.. காது கேளாத சிறுமி.. வயசு வெறும் 11 தான்!
கடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.. ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும் லிப்டை பயன்படுத்தும்போது, லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் என்ற 66 வயது கொடியவன்தான் இந்த காம செயலுக்கு வித்திட்டவன்.

இதையடுத்துதான், அங்கு வேலை பார்த்து வந்த பிளம்பர் முதல் தண்ணீர் கேன் போடுபவர் வரை இந்த பெண்ணை சீரழித்துள்ளனர். அதில் ஒருவர்தான் பழனி.. 40 வயது இந்த காம மிருகம், அந்த அப்பார்ட்மென்ட் வாட்சமேன் ஆவார்.. 17 பேரும் சேர்ந்துதான் மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் வெறிச்செயலில் ஈடுபட்டது.
இந்த 17 பேரில் பாபு என்பவர் விசாரணையின்போதே இறந்துவிட்டார்.. குணசேகரன் என்பவரை நீதிமன்றம் விடுவித்த நிலையில், பழனி உட்பட 15 பேருக்கும் கோர்ட் தண்டனை தந்தது. இந்த 15 பேரில் 4 பேருக்கு ஆயுள் கால சிறை தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது.. சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதாலேயே இவர்களுக்கு இந்த தண்டனை தரப்பட்டது..
மற்றவர்களுக்கு 7 ஆண்டு, 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.. இதில், சாகும்வரை ஜெயில் தண்டனை என்றதில் பழனியும் ஒருவர் ஆவார்.. அவருக்கு வயது 40.. இவர்தான் இன்று ஜெயிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். தனது லுங்கியால் ஜெயிலில் உள்ள அறையிலேயே தூக்கு போட்டு இறந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இவர் கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் பழனியின் தற்கொலை சம்பந்தமாக தொடர் விசாரணை நடக்கிறது.. இந்த சம்பவம் புழலில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications