ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை அமைந்தகரையில் குலுக்கல்! 100 தமிழக இஸ்லாமியர்களுக்கு சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெக்கா, மதினா செல்ல வேண்டும் என்ற வாழ்நாள் கனவோடு இருக்கும் ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை நேரத்தில் ஒரு தடை இருந்தது. ஆனால் அந்த தடையையும் தாண்டி தமிழகத்தைச் சேர்ந்த 100 பேருக்கு ஒரு பெரிய நற்செய்தி ஒன்று காத்து கொண்டிருக்கிறது.. ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த அந்தப் பின்னணி என்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

பக்ரீத் பண்டிகை காலத்தில் பொதுவாக உம்ரா பயணம் மேற்கொள்ள அனுமதி இருக்காது. அந்தப் புனித நாட்களில் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபிய அரசு உம்ரா விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்.

Ayeshaamma Goat Farm

பக்ரீத் பண்டிகை மற்றும் ஹஜ் வழிபாடுகள்

பக்ரீத் பண்டிகை மற்றும் ஹஜ் வழிபாடுகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகுதான், மறுபடியும் உம்ரா பயணம் செல்வதற்கான விசாக்கள் வழங்கப்பட்டு மக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குவார்கள். இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய பெருமக்களின் புனிதக் கனவை நனவாக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான நற்செய்தி வெளியாகியுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழக இஸ்லாமிய மக்களுக்கு ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை நிறுவனம் அறிவித்த இலவச உம்ரா பயண திட்டத்திற்கான குலுக்கல் நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள ஜமாத் மஹாலில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை நிறுவனம்

தமிழகம் முழுவதிலும் இருந்து 100 பேரை முற்றிலும் இலவசமாக புனிதப் பயணம் அழைத்துச் செல்லப் போவதாக அந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது அந்த அறிவிப்பு அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது... ஏழை, எளிய மக்களின் மெக்கா, மதினா புனிதப் பயணக் கனவு இதன் மூலம் நனவாக போவதால் இஸ்லாமிய மக்கள் மத்தியில் செம்ம மகிழ்ச்சி காணப்படுகிறதாம்.

ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை சார்பில், வரும் பக்ரீத் பண்டிகைக்காக முன்கூட்டியே ரூபாய் 9,000 செலுத்தி ஆடு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச உம்ரா பயணம் வழங்கப்படும் என ஒரு அதிரடியான சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

சூப்பர் சான்ஸ் - ஆயிரக்கணக்கான கஸ்டமர்கள்

இந்த சூப்பர் சான்ஸை பயன்படுத்திக் கொள்ள நினைத்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த திட்டத்தின் கீழ் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் மளமளவென குவிய ஆரம்பித்தன. .

இதையடுத்து புக்கிங் செய்திருந்த அனைவரின் பெயர்களும் ஒரு பெரிய குலுக்கல் கூண்டில் போட்டப்பட்டு, மக்கள் முன்னிலையில் மிகவும் நேர்மையான முறையிலும் வெளிப்படையான முறையிலும் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டனர்... இன்றுதான் அந்த முதற்கட்ட குலுக்கல் நடைபெற்றது. இதில் மொத்தம் 25 பேர் அதிர்ஷ்டசாலிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குலுக்கல் முறையில் 100 பேர்

தங்களின் பெயர்கள் குலுக்கலில் வந்ததுமே அவர்கள் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.. மீதமுள்ள நபர்களுக்கான குலுக்கல் அடுத்தடுத்த கட்டங்களாக தொடர்ந்து நடைபெறும் என நிறுவன நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை நிறுவனத்தின் நிர்வாக உரிமையாளர் முகமது சித்திக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பக்ரீத் பண்டிகை என்பது தியாகத்தின் அடையாளம். அந்தப் புனித பண்டிகையை முன்னிட்டு எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், ஒவ்வொரு இஸ்லாமியரின் வாழ்நாள் புனித கனவாக இருக்கும் உம்ரா பயணத்தை நிறைவேற்றும் ஒரு நல்வாய்ப்பாகவும் இந்தத் திட்டத்தை நாங்கள் அறிவித்தோம்.

தமிழகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 100 பேரை நாங்கள் எங்கள் சொந்த செலவில் இலவசமாக மெக்கா மற்றும் மதினா நகரங்களுக்குப் புனிதப் பயணம் அழைத்து செல்வோம். இன்று முதல்கட்டமாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிக விரைவில் தொடங்கப்படும்" என்று மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்தார்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+