Ayirai Fish: அழியும் நிலையில் அயிரை மீன்கள்! தம்மாதுண்டு மீனில் இத்தனை சத்துகளா?
சென்னை: மீன் பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மீன்களில் ஒன்று அயிரை மீன். இந்த மீன் மதுரை மாவட்டங்களில் அதிகம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மீன் தற்போது அழியும் நிலையில் உள்ளது என்றும் அதை தடுக்க கூடுதலாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அயிரை மீன் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அயிரை மீன்... மிகவும் சிறியதாக பொடிப்பொடியாக இருக்கும். இந்த மீன் கிலோ ரூ 2000-க்கு மேல் விற்பனையாகும். இதை வெட்டி தர மாட்டார்கள். அவர்கள் தண்ணீரில் உயிருடன் போட்டு வைத்திருப்பார்கள்.

நாம் கேட்டாலும் ஒரு கவரில் தண்ணீருடனே அந்த மீனை தருவார்கள். இதை வீட்டில் வந்து குழம்பு சட்டியில் ஊற்றினாலும் துள்ளி குதிக்கும். இதை கொல்வதற்கு சிறிது பால் ஊற்றுவார்கள். பால் ஊற்றும் போது துள்ளி குதிக்கும்.
கல் உப்பு
சிறிதளவு கல் உப்பு போட்டால் அள்ளி தெறிக்கும். அப்படியே ஒரு தட்டு போட்டு மூடி வைத்தால் அது வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறி இறந்துவிடும் என்பார்கள். இத்துடன் இதன் வேலை முடியாது.
வழுவழுப்புத் தன்மை
அந்த பால் கலந்த தண்ணீரை ஊற்றிவிட்டு இந்த மீனை 4 அல்லது 5 முறையாவது கழுவ வேண்டும். அதில் வழுவழுப்பு தன்மை அதிகம் இருக்கும். அதை கழுவாமல் குழம்பு வைத்தால் குழம்பில் கெட்ட வாடை வரும் என்பார்கள். இதனால் அதை சாம்பல் போட்டு நன்றாக கழுவிவிடுவார்கள்.
துள்ளி குதிக்கும்
சிலர் கடையில் வாங்கும் போதே பாலை ஊற்றியும் வீட்டிற்கு கொண்டு வருவார்களாம். அது வீட்டிற்கு வருவதற்குள் இறந்துவிடுமாம். அதன் பிறகு அதை வைத்து குழம்பு வைப்பார்கள். அந்த குழம்பு அத்தனை ருசியாக இருக்கும் என்கிறார்கள்.
அழியும் அயிரை
இந்த மீன்கள் ஆறு, குளம், குட்டை , வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் வளரும். இவை மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் வளரும். இந்த மீன் தற்போது அழியும் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அயிரை மீன் வளர்ப்பு
இதுகுறித்து அயிரை மீன் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசியர் வேல்முருகன் கூறியிருப்பதாவது: அயிரை மீன்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளன. இந்த மீன்களை பாதுகாக்க தேனி மாவட்டம் வைகை அணை அருகே கடந்த ஆண்டு அயிரை மீன் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது.
மீன் வளர்ப்பு
இந்த மையத்தில் அயிரை மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, மீன் வளர்ப்போருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
எங்கு வளர்கிறது
இந்த மையங்களில் பயிற்சி பெற்றோர், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அயிரை மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அயிரை மீன் வளர்ப்பிற்கு தேவையான குஞ்சுகள், இந்த மையத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மீனில் விலை என்ன
இது ஒரு சுவைமிக்க நன்னீர் மீன். இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. இந்த மீன் ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே தற்போது அயிரை மீன் வளர்க்க மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
எப்படி அழிகிறது
இது எதற்காக அழிகிறது என்றால் இது வளரும் இடங்களில் நச்சுக்கள், தொழிற்சாலை கழிவுகள போன்றவை கலக்கின்றன. இதனால் அயிரை மீன்கள் இனப்பெருக்கமும், வாழ்விடமும் பாதிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம், நீர் நிலைகளில் ஆக்ஸிஜன் குறைபாடு, மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் சேதமடைவது போன்ற காரணங்களால் அயிரை மீன் அழிவில் உள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
விராலை விட சத்தானது
இந்த மீனில் விரால் மீன்களை விட அதிக கால்சியம் சத்து உள்ளது. கட்லா, ரோகு போன்ற நன்னீர் மீன் இனங்களுக்கு மாற்று மீன் வளர்ப்பு அயிரை மீனாகும். எனவே இது அழிவை தடுக்க நிறைய இடங்களில் வளர்க்க வேண்டும். கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications