இல்லாத பொல்லாத வதந்தி! தமிழ்நாட்டை பாகிஸ்தான் என விமர்சிக்கும் வடஇந்திய நெட்டிசன்ஸ்! என்ன நடக்குது?
சென்னை: தமிழ்நாட்டை பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று வடஇந்திய நெட்டிசன்ஸ் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இத்தனை காலம் கேரளாவை பற்றி இத்தகைய விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டை பற்றி நேற்று பரப்பப்பட்ட வதந்திகளுக்கு இடையே இப்போது தமிழ்நாட்டை பாகிஸ்தான் என்று அழைக்கும் புதிய போக்கு வடஇந்திய நெட்டிசன்கள் இடையே ஏற்பட்டு உள்ளது.
நேற்று ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு இடையே, கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் வைத்தது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த புகாரில், 22 ஜனவரி அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.

தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கூறியுள்ளார்.
சேகர் பாபு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் வதந்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு வெளியிட்டார். அதில் ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்
அதில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!, என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் நேற்று நாள் முழுக்க தேசிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
வடஇந்தியா: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று வடஇந்திய நெட்டிசன்ஸ் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இத்தனை காலம் கேரளாவை பற்றி இத்தகைய விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டை பற்றி நேற்று பரப்பப்பட்ட வதந்திகளுக்கு இடையே இப்போது தமிழ்நாட்டை பாகிஸ்தான் என்று அழைக்கும் புதிய போக்கு வடஇந்திய நெட்டிசன்கள் இடையே ஏற்பட்டு உள்ளது. பொய்யான வதந்திகளை நம்பி தமிழ்நாட்டின் மீது விமர்சனம் வைக்கும் போக்கு ஏற்பட்டு உள்ளது.
திமுக தரப்பு: இந்த மொத்த சம்பவம் குறித்து திமுக தரப்பில் விசாரித்ததற்கு.. ஆளும் திமுக அரசு மீது அபாண்டமாக பழி சுமத்தும் விதமாக இப்படி பொய்யை பரப்புகிறார்கள். இது பொய் என்று அவர்களுக்கு தெரியும். அப்படி தெரிந்தும் கூட அதை பரப்புவதே கோபம் தருகிறது

இப்படி அரசியல் செய்து தமிழ்நாட்டில் இடம் பிடிக்க முடியாது. ஆனால் அவர்களின் நோக்கமும் அது இல்லை. தமிழ்நாட்டில் இப்படி நடக்கிறது என்று வடமாநிலங்களில் சொல்லி.. இந்திய கூட்டணி பற்றிய இமேஜை கெடுப்பார்கள். இங்கே நடக்காத விஷயங்களை நடப்பதாக பொய்யாக வடமாநிலங்களில் பரப்பி.. அங்கே வெற்றிபெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

தமிழ்நாடு vs வடக்கு என்ற அரசியலை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.. அவர்களின் இந்த செயல்களுக்கு பின் பெரிய பிளானிங் இருப்பதாகவே தோன்றுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது என்கின்றனர் திமுக வட்டாரத்தினர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications