மீண்டும் ரயில்வே தந்த சர்ப்ரைஸ்.. ஆயுதபூஜை, தீபாவளிக்கு வந்த ஸ்பெஷல் அறிவிப்பு.. குஷியில் நாகர்கோவில்
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்நிலையில், இப்பண்டிகையை வரவேற்று கொண்டாட இந்தியா முழுவதும் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.. தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு, பஸ்கள் இயக்கப்படுகின்றன.. இதில், ரயில்களில் முன்பதிவு முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இவ்வருடமும் தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

எனவேதான் பேருந்து மற்றும் ரெயில்களில் டிக்கெட்டை முன்பதிவு தொடங்கப்பட்டது.. அதிலும், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக பேருந்துகளை தமிழக அரசு இயக்குவது வழக்கமாகும்.
ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்
ரெயிலில் முன்பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி துவங்கி, அடுத்த சில மணிநேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டன.. அக்டோபர் 16, 17-ம்தேதிக்கான முன்பதிவு முடிவடைந்த நிலையில், அக்டோபர் 18, 19, 20-ம்தேதிக்காக முன்பதிவு முறையே ஆகஸ்ட் 19, 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது..
இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் உள்ளதாவது: "முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 1,000 வரை பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என்று ஆய்வு செய்து, அதற்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில் டூ தாம்பரம்
அந்த வகையில்; நாகர்கோவிலில் செப்.28, அக்5, 12, 19, 26ல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12.30க்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் செப்.29, அக்6, 13, 20, 27-ல் பிற்பகல் 8.30க்கு புறப்பட்டு காலை 5.15க்கு நாகர்கோவில் வரும்.
சென்ட்ரலில் செப்.25, அக்2, 9, 16, 23ல் இரவு 11.50க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கம் போத்தனூரில் செப்.26, அக்3, 10, 17, 24-ல் மாலை 6.30க்கு புறப்பட்டு காலை 3.15க்கு சென்ட்ரல் வரும்.
சென்னை சென்ட்ரலில் செப்.24, அக்1, 8, 15, 22ல் பிற்பகல் 3.10க்கு புறப்பட்டு காலை 6.30க்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கம் செங்கோட்டையில் செப்.25, அக்2, 09, 16, 23-ல் இரவு 9க்கு புறப்பட்டு காலை 11.30க்கு சென்ட்ரல் வரும்.
நெல்லை டூ சென்னை ரயில்கள்
நெல்லை சென்னை எழும்பூர் இடையே செப்.25, அக். 2, 9, 16, 23ல் இரவு 9.30க்கு சிறப்பு ரயில் இயக்கம். சென்னை எழும்பூர் - நெல்லை இடையே செப்.26, அக். 3,18, 17, 24-ல் நண்பகல் 12.30க்கு சிறப்பு ரயில் இயக்கம்.
தூத்துக்குடியில் இருந்து செப்.29, அக்.6, 13, 20, 27ல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் காலை 10.45க்கு எழும்பூர் வரும். மறுமார்க்கம் எழும்பூரில் இருந்து செப்.30, அக்.7, 14, 21, 28-ல் பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15க்கு சேரும். பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் முன்பதிவு செய்யலாம்" என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
-
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications