காவல் துறை அதிகாரியே பாராட்டிய அருமருந்து.. கொரோனாவுக்கு எதிரி.. ஆயுர்வேத டாக்டர் கவுதமன் அட்வைஸ்
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயத்தை குடிக்குமாறு ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கவுதமன் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
டாக்டர் கவுதமன் சான்றளிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். Healing சிகிச்சையில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்.
இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் தலைமை மருத்துவ இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், ஒரு வைரஸ் தொற்று நோய் இன்று நம்முடைய வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.

நோயை எப்படி தடுப்பது
இதில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது. இந்த நோயை எப்படி தடுப்பது, வந்துவிட்டது எப்படி குணமாக்குவது? வந்து போய்விட்டது , மீண்டும் ஏற்படாமல் எப்படி தடுப்பது? கொரோனா நோய் வந்த பிறகு உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. இதை நாம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி
நம் உடலில் எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் நோயை பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த நோய் வந்துவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும். ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறார்கள்.

3 பேருக்கு சோதனை
அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மற்ற 3பேருக்கும் சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பே இல்லை. இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு உடலிலும் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது நமக்கு உதவி செய்யக் கூடிய மிகப் பெரிய காரணியாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்
நம் வீட்டிலிருந்த படியே நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயத்தை சொல்லிக் கொடுக்க போகிறேன். இதை தயார் செய்வது மிகவும் சுலபமான ஒன்று. இதை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

என்னென்ன பொருட்கள்
- கடுகுரோகிணி
- கீழாநெல்லி
- கொழிஞ்சி
- கரிசாலை
- ஆடாதோடை
- சீந்தில் கொடி
- கடுக்காய்
- தான்றிக்காய்
- நெல்லிக்காய்
- வேப்பம்பட்டை
- மூக்கிரட்டை
- திப்பிலி

300 மில்லி தண்ணீர்
இந்த மூலிகைகளை 3 கிராம் எடுத்துக் கொண்டு 300 மி.லி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 100 மில்லியாகும் போது அடுப்பை அணைத்துவிட்டு அதை வடிகட்டி, தேவைப்பட்டால் தேனோ, பனங்கற்கண்டோ சேர்த்து இந்த கசாயத்தை காலையும் இரவும் உணவுக்கு முன்பு எடுத்துக் கொள்ளலாம்.

அதிகாரி பாராட்டு
ஒரு காவல் அதிகாரி கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார். பின்னர் நான் அவரை இந்த கசாயத்தை குடிக்குமாறு கூறினேன். இதை காவல் துறை அலுவலகத்திலேயே தயார் செய்து அனைத்து அதிகாரிகளும் குடித்து வருகிறார்கள். இதுவரை அவர்களில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications