தனி டம்ளர், சேர்! இவங்களுக்கு இதான் சார் வேலையே! அதிர வைக்கும் அனுராதாவின் பின்னணி! இவ்வளவு வன்மமா?
சென்னை : எஸ்சி பசங்க என்றாலே பிரச்சனைதான் செய்வாங்க.. அந்த பையன் எந்த கம்யூனிட்டி என சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அவர் இதே புகாரில் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டதும், கல்லூரி பணியாளர்களிடம் கூட சாதிய வன்மத்துடனேயே நடந்து கொண்டதாக பகீர் புகார் கூறுகின்றனர் மாணவர்கள்..
Recommended Video
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் அனுராதா அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவர்களிடையே சாதிய விஷத்தை பரப்பும் வகையில் பேசிய அனுராதா மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

அதிர்ச்சி ஆடியோ
இந்நிலையில், அனுராதா பேசியது என்ன? இவ்வாறு அவர் பேசுவது முதல் முறை தானா? என்பது குறித்த பல்வேறு பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்த அனுராதா தற்போது தமிழ் துறை தலைவராக இருக்கிறார். இவர் தான் கல்லூரி மாணவரிடம் பேசிய ஆடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் அனுராதா 'முகத்தைப் பார்த்தாலே பி.சி.யா? எம்.பி.சியா? என கண்டுபிடித்து விடுவேன்.

என்ன கம்யூனிட்டி?
நீ என்ன கம்யூனிட்டி? அந்தப் பையன் என்ன கம்யூனிட்டி? என பேசியதோடு எஸ்சி பசங்க என்றாலே பிரச்சனைதான் செய்வாங்க! அந்தப் பையன் எந்த கம்யூனிட்டி?' என பேசி இருக்கிறார். ஆசிரியையின் இந்த அப்பட்டமான ஜாதிப் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாணவர் அந்த ஆடியோவை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விசாரணைக்கு மறுப்பு
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் ஆசிரியை அனுராதாவை அழைத்துள்ளது ஆனால் விசாரணைக்கெல்லாம் தன்னால் வரமுடியாது என ஆணவமாக பேசியிருக்கிறார். மேலும் தனக்கு பின்னால் பல 'முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள்' இருக்கிறார்கள்! என்னை ஒன்றும் செய்து விட முடியாது என அவர் மிரட்டியதாகவும் நம்மிடம் பேசிய கல்லூரி பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை புதிதல்ல!
மேலும் பேராசிரியை அனுராதா சாதி ரீதியான சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல எனவும் கடந்த ஆண்டும் இதே போல ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசியதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அனுராதா மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இருந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார் அனுராதா.

சாதி ஆணவம்
அதன் பின்னர் தன் மீது அவதூறு பரப்பும் வகையிலும் காழ்ப்புணர்ச்சியோடும் கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாகவும் தன்னை உரிய காரணம் இன்றி காஞ்சிபுரத்துக்கு மாற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதை அடுத்து அனுராதாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய நிலையில் மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு திரும்பிய அனுராதா தனது இயல்பினை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சாதிய வன்மத்தை கக்கும் வகையில் மாணவர்களிடம் நடந்து கொண்டிருக்கிறார். மேலும் தான் அமர்ந்திருக்கையில் கூட வேறு ஆசிரியைகள் அமரக்கூடாது எனவும் வீட்டிலிருந்து டம்ளர் தட்டு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வருவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலோடு தூய்மை பணியாளர்களை அருகில் கூட அனுமதிக்க மாட்டார் என்கின்றனர் அவரிடம் படித்த மாணவர்கள்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications