அமலாக்கத்துறை சோதனை செய்யும் கட்டிடத்தை பாருங்க.. சாதாரண இடம்.. ஆனால் தமிழ்நாட்டின் பெரிய புள்ளி?
சென்னை: சென்னையில் முக்கிய புள்ளிகளை குறிவைத்து ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு இடம் பார்க்க சாதாரண வீடு போல் உள்ளது. பொதுவாக அமலாக்கத்துறை ரெய்டு என்றால், மிகப்பெரிய பங்களாக்கள், அடுக்குமாடி வீடுகள், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் இருக்கும். ஆனால் மிகப்பெரிய ஊழலுக்கு தொடர்புடையதாக கருதி சாதாரண வீடு போல் இருக்கும் ஒரு இடத்தில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.. ஊழலுக்கு பின்னணியில் சிறிய நிறுவனங்கள் இருப்பதாக கருதி அவற்றை குறிவைத்து களம் இறங்கி உள்ளது.
நீங்கள் பார்க்கும் இந்த கட்டிடம் தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் இடம்..இந்த இடத்தை பார்க்கும் போது மிக சாதாரணமான வீடு போல் இருக்கிறது. இந்த வீடு போன்று இருக்கும் கட்டிடம் சாதாரண இடமாக அமலாக்கத்துறை கண்ணுக்கு தெரியவில்லை..அதன் பின்னணியில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய முக்கிய புள்ளிக்கு தொடர்பு இருப்பதாக நம்புகிறதாம்.. அதனால் இந்த சோதனையில் இறங்கி உள்ளதாம் அமலாக்கத்துறை..

சென்னை அசோக் நகரில் பிரபல நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பார்க்க சாதாரண ஒரு அடுக்குமாடி வீடு போல் உள்ளது. சுற்றுச்சூழல் தொடர்புடைய பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படும் இந்நிறுவனம் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனமாகும், இது சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான ஏற்பாடுகளையும், அவர்களுக்கான தீர்வுகளை வழங்குவதாக கூறுகிறது.
சுற்றுச்சூழல் சேவைகளில் ஆலோசனை, இன்ஜினியரிங், உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை வழங்குவது மற்றும் நிறுவுவது, சட்டப்பூர்வ சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் மேம்படுத்த உதவுவது போன்ற பணிகளை செய்வதாக கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தில் தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏகே நாதன் மற்றும் அவருக்கு தொடர்புடைய விருகம்பாக்கம், சாலி கிராமம், தி நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முன்பு அமலாக்கத்துறை ரெய்டுகள் பிரபலங்களின் வீடுகளிலோ, அல்லது பெரிய அடுக்குமாடிகளிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ நடக்கும். ஆனால் இன்று சோதனை நடைபெறும் இடத்தை பார்க்கும் போது, சாதாரண இடம் போல் இருக்கிறது. முகப்பில் உள்ள பெயர் பலகைகளை பார்த்தால் அப்படித்தான் இருக்கும். ஆனால் குற்றச்சாட்டுகள் எல்லாம் பெரியதாக உள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதாகவும், மாசுகட்டுப்பாட்டு வாரிய டெண்டர்கள் தொடர்பாகவே சோதனை நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ்நாட்டின் மிக பெரிய முக்கிய புள்ளியை தொடர்புப்படுத்தி எதிர்க்கட்சியினரும் சில யூடியூபர்களும் இந்த ரெய்டு குறித்து தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் அமலாக்கத்துறை விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை என்னவென்று தெரியும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications