"கொடுமைகள்".. ஸ்டாலின் சொன்ன மாதிரியே நடக்குதே.. கவனமாக இருங்க.. அமைச்சர்களுக்கு போன வார்னிங்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் சொன்னது போலவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட தொடங்கி உள்ளனர்.
நேற்று பெங்களூரில் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு பின் சென்னை வந்தவர் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும் அவர் பேசினார்.
அதில், இந்தியாவை பொறுத்தவரைக்கும், இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாம் இன்னும் பல கொடுமைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த ரெய்டுகள் எல்லாம் எதிர்பார்த்ததுதான்.

இன்னும் பல ரெய்டுகள் நடக்கும். போகப்போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
இதை எல்லாம் வெற்றிகரமாக சந்தித்து மீண்டு வருவோம் என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே தற்போது அமலாக்கத்துறை மூலம் இன்னொரு அமைச்சரும் குறி வைக்கப்பட்டு உள்ளார். அதன்படி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கீழ் வந்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்று அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அமலாக்கத்துறை இடைக்கால தடை நீக்கப்பட்டதும் விசாரணையை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடக்கும் வழக்கில் அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுக்கு உதவ வேண்டும் . அவர்களுடன் இணைந்து நாங்கள் விசாரணை நடத்த விரும்புகிறோம் என்று தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டாலின் எச்சரிக்கை: இந்த ரெய்டுகள் குறித்து முன்பே அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அழைத்து.. லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உள்ளார். முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, ஏ வ வேலு உள்ளிட்டவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து பொன்முடி வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. முதல்வரின் எச்சரிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் இந்த ரெய்டுக்கு தயாராக இருந்ததாகவே கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications