பக்ரீத் பண்டிகை.. சென்னையில் இருந்து இன்று சொந்த ஊர் போறீங்களா.. மகிழ்ச்சியான செய்தி
சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, பெங்களூரு, சேலம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. 30ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் அன்று ஒரு நாள் கூடுதலாக விடுமுறை எடுத்தால், அடுத்ததாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் வருகிறது. அடுத்த நான்கு நாட்கள் பலரும் சென்னை,பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.

இதனால் பேருந்து நிலையங்களில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொதுவாக விடுமுறை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுபோன்ற சமயங்களில் மக்கள் அரசு பேருந்துகளையே அதிகம் சார்ந்துள்ளனர். ஏனெனில் தனியார் பேருந்துகளில் கட்டணம் அப்போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.அந்த வகையில் இப்போதும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது,.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, பெங்களூரு, சேலம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்ததாவது: பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜூன் 28) சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட பிற முக்கிய இடங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications