பக்ரீத் பண்டிகை.. நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
சென்னை: இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தினர். பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இஸ்லாமியர்களால் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் 'தியாகத் திருநாள்' என்றும், அரபியில் 'ஈத் அல்-அதா' என்றும் அழைப்பது வழக்கம். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 12-வது மாதமான துல்ஹஜில் இது கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் சென்று இஸ்லாமியர்கள் தொழுது, புது ஆடை உடுத்தி பண்டிகையை கொண்டாடினார்கள். இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
கடலூர் விருத்தாசலம், நாகை வேதாரண்யம், புதுக்கோட்டை, சிவகங்கை காரைக்குடியில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புது ஆடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, தொழுகையில் ஈடுபட்டனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் பக்ரீத் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications