Bakrid: தமிழ்நாட்டில் வரும் 28 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: மே 28 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் அறிவித்துள்ளார். துல்ஹஜ் மாதத்திற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழகத்தில் தென்படவில்லை என்றும், இதனால் செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறையாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் வரும் மே 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகை
இஸ்லாமியர்களின் முக்கியமான புனித பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் திருநாள் கருதப்படுகிறது. ஹஜ் பெருநாளாகவும் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் முஸ்லிம் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாக உணர்வை நினைவுகூரும் வகையிலேயே பக்ரீத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
இஸ்லாமிய மரபின் படி, இறைத்தூதர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் ஆணையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்தப் புனித பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்ராஹிம் நபியின் அர்ப்பணிப்பையும், இறைநம்பிக்கையையும் போற்றும் விதமாக இந்த பண்டிகை கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை
பக்ரீத் நாளில் முஸ்லிம் மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவதுடன், குர்பானி வழங்கும் வழக்கத்தையும் பின்பற்றுகின்றனர். மேலும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுடன் அசைவ உணவுகளை பகிர்ந்து மகிழ்வதும் இந்த திருநாளின் முக்கிய அம்சமாகும்.
பிறை காணப்படுவதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை தேதி உறுதி செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பக்ரீத் பண்டிகை மே 28 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் அறிவித்துள்ளார். துல்ஹஜ் மாதத்திற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை மாலை (அதாவது மே 17 ஆம் தேதி) தமிழகத்தில் தென்படவில்லை என்றும், இதனால் செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறையாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் வரும் மே 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications