பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க ஹைகோர்ட் மறுப்பு!
Recommended Video

சென்னை: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன் பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

தீர்ப்பு வந்ததும் அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும். வாகனத்தை தாக்கி எரித்ததாக நேரடி குற்றச்சாட்டு இல்லை என பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளரை திட்டியதால் என் கட்சிக்காரர் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் கட்சிக்காரர் பெயரை சொல்லவில்லை.
வழக்கில் 72வது நபராக பாலகிருஷ்ண ரெட்டி குற்றம்சாட்டப்பட்டுள்ளார், நேரடியாக இல்லை என பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்பு வக்கீல் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்கிறீர்களா? மேலும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி கேட்டார். இதையடுத்து மாலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட மறுத்த கோர்ட், பாலகிருஷ்ண ரெட்டியின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2016ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஓசூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ண ரெட்டி. தற்போது தண்டனையை நிறுத்தி வைக்க ஹைகோர்ட் மறுத்து விட்டதால் பாலகிருஷ்ண ரெட்டி கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த தண்டனை காரணமாக அவரது எம்எல்ஏ பதவியும் பறி போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications