சென்னையில் வங்கதேச பயங்கரவாதி அசதுல்லா ஷேக் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜஹாதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நீலாங்கரை அருகே அசதுல்லா ஷேக் போலீசில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

Bangladesh terrorist arrested from Chennai

இதனையடுத்து பீகாரில் 2018-ம் ஆண்டு புத்த மத தலைவர் தலாய்லாமாவை கொலை செய்ய வெடிகுண்டு வைத்த வழக்கில் அசதுல்லா கைது செய்யப்பட்டார். அவர் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அசதுல்லாவை ஹைதராபாத் கொண்டு சென்றனர். சென்னையில் அசதுல்லாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பத்உம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து கடல்வழியாக 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நுழைந்ததாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. தற்போது வங்கதேச பயங்கரவாதி சென்னையில் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+