சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற பெண்.. கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..உடல் நசுங்கி உயிரிழப்பு
அண்ணாசாலையில் பழைய கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை: அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது கட்டிடம் விழுந்ததால் அந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். 2 பெண்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட விபத்தினால் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே நாள் முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் அண்ணாசாலையில் பழமையான பயன்படுத்தப்படாமல் அதிகமான கட்டிடங்கள் உள்ளது. அந்த பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை தானாகவே இடிந்து விழுந்தது.
காலையில் வேலைக்காக சென்று கொண்டிருந்தவர்களின் மீது சுவர் விழுந்தது. இதில் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 2 பெண்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கட்டிட விபத்தினால் அண்ணாசாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 1 கி.மீ தூரம் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. கட்டிடத்தின் உரிமையாளர் யார் என்றும் கட்டிட விபத்து நடந்ததையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications