துபாய் வாழ் இந்தியர்களுக்கு.. வரப்பிரசாதமாக வந்த புதிய சட்டம்! என்னன்னு பாருங்க!
துபாய்: துபாய் உட்பட ஐக்கிய அமீரகம் முழுவதும் இந்த மாதம் முதல் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதில் வேலை வாய்ப்பு தொடர்பான சட்டம் இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. என்ன சட்டம் அது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
துபாயில் தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி, வேலையை விட்டு விலகும் தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்தம் முடிந்தவர்கள் குறித்துப் புதிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஒப்பந்தம் முடிந்த பிறகு அல்லது இரு தரப்பு ஒப்புதலுடன் வேலையை மாற்றிக்கொள்ளலாம். மட்டுமல்லாது வேலை மாறுவதற்கான 'கிரேஸ் பீரியட்' 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

துபாயின் இந்த புதிய தொழிலாளர் சட்ட மாற்றங்கள் அங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கின்றன. குறிப்பாக கிரேஸ் பீரியட் நீட்டிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
என்ன மாற்றம்?
முன்பு ஒரு தொழிலாளர் வேலையை விட்டு நின்றால் அல்லது நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கினால், அவர் நாட்டை விட்டு வெளியேற வெறும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய சட்டம் இந்த கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது. அதாவது, இப்போது இது 60 நாட்கள் முதல் 180 நாட்கள் (6 மாதங்கள்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவசர அவசரமாக ஊருக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. நிதானமாக மற்றொரு வேலையைத் தேடவோ அல்லது தனது பணப் பலன்களை முறையாகப் பெற்றுச் செல்லவோ போதுமான நேரம் கிடைக்கும். அதேபோல விசா மாறுதலும் ஈஸியாகும்.
விசா மாறுதல் எளிதாகும்
முன்பு இருந்த Ban முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழிலாளரும் அவர் பணியாற்றும் நிறுவனமும் பேசி முடிவெடுத்தால், பழைய நிறுவனத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல்கள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. இது திறமையான இந்தியத் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு சிறந்த நிறுவனத்திற்கு அதிக ஊதியத்திற்கு மாறுவதை எளிதாக்குகிறது.
இந்தியர்கள் நிம்மதி
முன்பெல்லாம், விசா காலம் முடிந்துவிடுமோ, அபராதம் கட்ட நேரிடுமோ என்ற பயம் இந்தியத் தொழிலாளர்களிடையே அதிகம் இருக்கும். ஆனால் இந்த புதிய சட்டம் மூலம் 6 மாதங்கள் வரை அவகாசம் இருப்பதால், சட்டவிரோதமாகத் தங்கும் நிலை குறையும். இது அங்குள்ள இந்தியர்களின் மன நலனுக்கும், சட்ட ரீதியான பாதுகாப்பிற்கும் பெரிய பலம் சேர்க்கிறது.
ஒருவேளை துபாயை விட்டு இந்தியா திரும்ப முடிவு செய்தாலும், அவசரமின்றி தனது சேமிப்பு, வங்கி கணக்குகள் மற்றும் இதர விவகாரங்களை முறையாக முடித்துவிட்டு வரலாம். அந்த வகையில் இந்த சட்டம் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications