வங்கி கடன் வேணுமா.. ஆதார் கார்டு + ரேஷன் கார்டு கொண்டு வாங்க.. வால்பாறையில் விழுந்த சூப்பர் நியூஸ்
சென்னை: வங்கி கடன் குறித்த அறிவிப்பு ஒன்றை, வால்பாறை நகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, சாலை வியாபாரிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில், வேலையில்லா திண்டாட்டம் என்பது அதிகரித்தபடியே உள்ளது.. வருடந்தோறும், 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம்.

எனவேதான், இந்த இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய, மாநில அரசாங்கங்கள் தயாராக உள்ளன.
தொழில் கடன்: இதில் முக்கியமானது, இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்ட தொழில் மையம்... ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும், இந்த மையத்தில் பொது மேலாளர் ஒருவரும் இருப்பார்கள்.. இவர் மூலம் தொழிலுக்கான கடனை மானியத்துடன் பெறலாம்.
தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிகள் மூலம் தொழில் கடனானது வழங்கப்படும்.
அதேபோல, நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி, அவர்களின் வணிக முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) என்ற கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, சாலையோர வியாபாரிகளுக்கு பிணை இல்லாத குறைந்த வட்டியிலான கடன், வழங்கப்பட்டு வருகிறது.
வால்பாறை நகராட்சி: இன்னும் இதுபோல எத்தனையோ கடனுதவி திட்டங்கள் உள்ளன.. அந்தவகையில், வால்பாறை நகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அசரடித்து வருகிறது. வால்பாறையில் சாலையோர வியாபாரிகளுக்காகவும் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.. அதாவது, வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன..
மத்திய அரசின், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில், தள்ளுவண்டிகள் கடந்த மாதம் வழங்கப்பட்டன..
இப்போது, சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில், வங்கி மூலமாக தலா, 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சாலையோர வியாபாரிகளுக்கு முதல் கட்டமாக, 22 வாகனங்கள் வழங்க போகிறார்களாம்.
வியாபாரிகள்: மற்ற வியாபாரிகளுக்கு விரைவில் அவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் குடும்பத்திற்கு காப்பீடு மற்றும் நல வாரியம் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, போன் எண், ஆகியவற்றை, நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் நகரமைப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications