இரவில் சென்னை வேளச்சேரி பேங்க் ஆப் இந்தியாவில் ஒரே பரபரப்பு! அதுவும் லாக்கர் ரூமில்.. கிரேட் எஸ்கேப்
சென்னை: சென்னை வேளச்சேரி பேங்க் ஆப் இந்தியா வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலையில் "பேங்க் ஆப் இந்தியா" வங்கி செயல்பட்டு வருகிறது.. இந்த பேங்குக்கு பக்கத்திலேயே ஏடிஎம் மையமும் இயங்கி வருகிறது..

திடீர் தீ விபத்து: இந்தநிலையில் நேற்றிரவு இந்த வங்கியிலிருந்து திடீரென நிறைய புகை வர ஆரம்பித்துவிட்டது.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதிக அளவிலான புகை வெளிப்படவும், இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர்... இந்த பேங்க்குக்கு பக்கத்திலேயே நிறைய வீடுகளும், வணிக நிறுவனங்களும் இருந்ததால், அப்பகுதி மக்களும் பதறிப்போய்விட்டார்கள்.. பிறகு உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்தனர்.
இதையடுத்து, போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. அதாவது, திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன..
பெரு முயற்சி: ஆனால், தீயணைப்பு வீரர்களால் வங்கிக்குள் நுழைய முடியாத அளவுக்கு புகை சூழ்ந்து கிடந்தது.. சுற்றிலும் கருமை படர்ந்திருந்த நிலையில், தீயணைப்பு கருவிகளை முதுகில் கட்டிக்கொண்டு வீரர்கள் உள்ளே சென்றனர்..
பிறகு புகைப்போக்கியை பொருத்தி, புகையை வெளியேற்றும் பணியை ஆரம்பித்தனர்.. ஆனால், வங்கிக்குள் எல்லா இடத்திலுமே புகைகள் இருந்ததால், எந்த பகுதியில் தீப்பற்றியிருக்கிறது என்பது தெரியாமல் திணறினார்கள்.. நீண்ட நேரத்துக்கு அதிகப்படியான புகை வெளியேற்றதால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறல் பாதிப்பும் ஏற்பட்டதாம்.
தப்பியது: எலக்ட்ரிக் மீட்டர் பொருத்தப்பட்ட அறையில், திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது..
எனினும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு புகையை முழுமையாக போக்கி, தீயையும் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதனால், வங்கியில் இருந்த பேப்பர்கள், சில படிவங்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது என்றாலும், இந்த வங்கிக்கு அருகாமையில் உள்ள ஸ்டாங் ரூமில் இருந்த பல லட்ச கணக்கான ரூபாய் நோட்டுகள் தப்பியிருக்கின்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications