இது ரொம்ப “டேஞ்சர்”.. அதென்ன “சோவா”? அச்சுறுத்தும் வைரஸ்.. ஸ்டேட் வங்கி, கனரா வங்கி அவசர எச்சரிக்கை
சென்னை: ஆண்டிராய்டு செல்போன்களில் சோவா என்ற வைரஸ் மூலமாக ஹேக்கர்கள் வங்கிக் கணக்குகளின் ரகசிய தகவல்களை திருடும் வாய்ப்பு இருப்பதாக கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இப்போது பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் கூகுள் பே, போன் பே, பே டிஎம் என டிஜிட்டல் செயலிகள் மூலமாகவே நடைபெறுகின்றன. எனவே ஹேக்கர்களும் ஸ்மார்ட்போன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வைரஸ்களை கண்டுபிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்கள் செல்போனுக்குள் வைரஸ்களை அனுமதிக்காதீர்கள். நம்பிக்கையான செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்திருங்கள் என எச்சரித்து இருக்கிறது.

சோவா வைரஸ்
ஆண்டிராய்டு இயங்குதளங்களில் செயல்படும் சோவா என்ற வைரஸ், மக்களை குறிவைத்து போலியான வங்கி செயலிகளை அறிமுகம் செய்கிறது. இதை பதிவிறக்கம் செய்த பின்னர் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் ஃபாஸ்வேர்டுகளை திருடப்படுகிறது. இணையதளங்கள், செயலிகளில் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது தகவல்களை இந்த செயலி திருடி வைத்துக்கொள்கிறது.

வங்கிகள் எச்சரிக்கை
இந்த செயலியை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்த பின்னர் மீண்டும் அதை நீக்க முடியாது என ஸ்டேட் வங்கி எச்சரித்து உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "போலி எஸ்.எம்.எஸ். மூலமாக இந்த வைரஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் ஸ்மார்ட்போனில் இருக்கும் மற்ற செயலிகள் குறித்த விபரங்கள் ஹேக்கர்களுக்கு செல்லும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வங்கி செயலிகள்
அதன் பின்னர் நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் செயலிகள் ஹேக்கர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். அவர்கள் தங்களுக்கு தேவையான (வங்கி) செயலிகளுக்கு தனித்தனியாக வைரஸ்களை அனுப்பி வைப்பார்கள். எப்போதெல்லாம் நாம் அந்த செயலிகளை பயன்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் நமது தகவல்கள் ஹேக்கர்களுக்கு அனுப்பப்படும்.

என்ன ஆபத்து?
இந்த சோவா வைரஸ் மூலமாக நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து செயலிகளின் பயன்பாட்டையும் கண்காணிக்க முடியும். முக்கியமான பாஸ்வேர்டுகள், தனிப்பட்ட விபரங்களை திருடலாம். ஹேக்கர்கள் தங்களுக்கு தேவைப்பட்டால் நமது செல்போன் டிஸ்பிளேவை ஸ்க்ரீன் ஷாட் கூட எடுத்துக்கொள்ளலாம். செல்போனில் இருக்கும் கேமராவை பயன்படுத்தி வீடியோ எடுக்கவும் செய்யலாம்.

தடுக்க முடியுமா?
ஒருமுறை இந்த வைரஸ் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டால் பின்னர் அதை நீக்குவது கடிதம் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். இதை தவிர்ப்பதற்கான ஒரே வழி கவனமாக இருப்பது மட்டுமே. எனவே தெரியாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் விமர்சனங்களை படித்துப் பார்ப்பதுடன், ஆப்களுக்கு அனுமதி வழங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆண்டிராய்டு அப்டேட்டுகளை முறையாக செய்வதுடன் ஆண்டி வைரசை பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications