ரூ. 2000 ஐ திரும்ப பெறும் அறிவிப்பால்.. இப்படி ஒரு பிரச்சனையா? அரண்டு போன வங்கிகள்.. போச்சே!
சென்னை: 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பால் வங்கிகள் முக்கியமான பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2000 ருபாய் நோட்டுகளை நாடு முழுக்க இருக்கும் வங்கிகள் திரும்ப வாங்கிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.
அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
ரூபாய் 2000 நீக்கம்:
2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அல்லது இன்று முதல் தங்கள் சொந்தக் கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
2000 ரூபாயை மாற்றும் வசதி செப்டம்பர் 30, 2023 வரை இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்து உள்ளது . ரூ.2000 கரன்சி நோட்டுகள் செப்டம்பர் 30க்குப் பிறகும் சட்டப்பூர்வமான டெண்டராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் சிக்கல்:
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பால் வங்கிகள் முக்கியமான பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மக்கள் பலர் 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
முக்கியமாக சில்லறை வணிகர்கள் பலர் இப்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
இதனால் பல வங்கிகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாம். மக்களிடம் கொடுக்க 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல வங்கிகளில் பணம் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டால் கைவசம் உள்ள 500 ரூபாய் நோட்டுகள் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கிகள் இந்த பற்றாக்குறையை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பற்றாக்குறை:
வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ள பணத்தை கடைகளில் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.
அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.
அடையாள அட்டை:
அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications