உயிருக்கே ஆபத்து.. தமிழகம் வந்த சீனா பூண்டு! சாப்பிட்டால் அவ்வளவு தான்.. அடையாளம் காண்பது ஈஸி
சென்னை: தடை செய்யப்பட்ட சீனா பூண்டு இந்தியாவில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும் இந்த பூண்டு குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதால் மார்க்கெட் மற்றும் கடைக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த பூண்டை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் அதனை எப்படி அடையாளம் காண்பது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சீனா.. எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நாடு. உலகில் உள்ள முன்னணி பிராண்டுகளை பின்பற்றி குறைந்த விலைக்கு அதேபோன்ற பொருட்களை தயாரித்து வழங்குவதில் முதன்மை நாடாக உள்ளது. அந்த வகையில் சீனாவில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களும் கூட உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக அந்த நாட்டில் விளைவிக்கப்படும் பூண்டு என்பது உடல்நலத்துக்கு அதிக கேடு விளைவிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பூண்டு விளைச்சலில் முதன்மை நாடாக உள்ள சீனாவுக்கு இந்த கெட்டப்பெயர் கிடைக்க முக்கிய காரணம் விவசாயத்தில் பின்பற்றப்படும் உயர்ரக தொழில்நுட்ப முறை தான்.
அதாவது சீனாவில் பூண்டு விளைச்சலுக்கு அதிக அளவிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு பூண்டு மிகவும் வேகமாக செழித்து வருகிறது. இதன் காரணமாக தான் பூண்டு விளைச்சலில் உலகளவில் முதன்மை நாடாக சீனா உள்ளது. இப்படி அதிகப்படியான ரசாயன உரங்களின் உதவியுடன் விளைவிக்கப்படும் பூண்டு நம் உடலுக்கு ஆபத்தானது. இதனால் நாட்டு மக்களின் நலன் கருதி சீன நாட்டின் பூண்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் கூட கள்ளச்சந்தையில் சீனா பூண்டு என்பது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீன பூண்டின் விலை மிகவும் குறைவு. அதனை இந்தியாவில் விற்பனை செய்யும்போது அதிக லாபம் கிடைக்கும். இதனால் தொடர்ந்து சீனா பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தற்போது சீனாவில் இருந்து கண்டெய்னர் மூலம் குஜராத் மாநிலத்துக்கு சீனா பூண்டு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் சீனா பூண்டு விற்பனையை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து தமிழகம் உள்பட பல இடங்களுக்கு இந்த சீனா பூண்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் அதிகப்படியாக பூண்டு விளைவிக்கப்படும். ஆனால் இந்த முறை பெய்த பருவம் தவறிய மழையால் பூண்டு விளைச்சல் என்பது குறைந்துள்ளது. இதனால் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பொதுமக்கள் பூண்டு வாங்கும் போது சீனா பூண்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதனை பொதுமக்கள் சில விஷயங்களை வைத்து எளிதாக சீனா பூண்டை அடையாளம் காணலாம். அதாவது சீனா பூண்டு அளவில் சிறியதாகவும், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அதேபோல் நம்நாட்டில் விளையும் பூண்டு அளவில் பெரியதாகவும், வலுவாகவும் இருக்கும். அதேபோல் நம் நாட்டின் பூண்டு அதிக நறுமணத்துடன் இருக்கும். ஆனால் சீனா பூண்டு லேசான நறுமணத்துடன் தான் இருக்கும்.இதனால் மார்க்கெட் மற்றும் கடைகளில் பூண்டு வாங்கும் மக்கள் பூண்டின் நிறம், அளவு, வாசனையை வைத்து நம் நாட்டில் விளையும் பூண்டை வாங்கி பயன்படுத்த வேண்டும். உடல்நலத்துக்கு கேடு என்பதால் தடை செய்யப்பட்ட சீனா பூண்டை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications