Explainer: நாளை தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்.. வாக்குப்பதிவு எப்படி நடக்கும்?
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தல் விருப்புரிமை அடிப்படையில் நடைபெறும். வேட்பாளர்களுக்கு 1 முதல் 23 வரை எண்ணிட்டு வாக்களிக்கலாம். இந்த தேர்தல் செயல்முறை எப்படி நடக்கும் என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது பார் கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 2 பெண் உறுப்பினர்கள் நியமன முறையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகில இந்திய பார் கவுன்சிலால் நியமிக்கப்படுவார்கள். மீதமுள்ள 23 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெறுகிறது.

143 பேர் போட்டி
இந்த 23 பேரில் குறைந்தபட்சம் 5 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், மொத்தம் 143 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பார் கவுன்சிலில் பதிவு செய்த 1 லட்சத்து 540 வழக்கறிஞர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 166 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக க்யூ ஆர் கோடு சிலிப் முறையில் பார் கவுன்சில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஆன்லைன் மூலமாக க்யூ ஆர் கோடு ஸ்லிப்பை டவுன்லோடு செய்து அதன்படியே வழக்கறிஞர்கள் வாக்களிக்க முடியும். அந்த ஸ்லிப்பில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயர், பதிவு எண், வாக்குப்பட்டியல் வரிசை எண், பதிவு செய்துள்ள வழக்கறிஞர் சங்கம், வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த QR கோடு ஸ்லிப்பை ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். நாளை (மார்ச் 30 - திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
வாக்கு செலுத்துவது எப்படி?
வழக்கறிஞர்களுக்கு, அனைத்து வேட்பாளர்களின் பட்டியலும் அடங்கிய வாக்குத்தாள் வழங்கப்படும். ஒரு வழக்கறிஞர் முன்னுரிமை அடிப்படையில் 1 முதல் 23 வேட்பாளர்களை, அவர்களின் பெயர்களுக்கு எதிராக 1, 2, 3 என நம்பரை உரிய முறையில் எழுதி தங்களது வாக்கை பதிவு செய்யலாம். ஒவ்வொரு வழக்கறிஞரும் குறைந்தபட்சம் 1 வாக்கையும், அதிகபட்சமாக 23 வாக்குகளையும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்த முடியும். NOTA-வும் கடைசி வாய்ப்பாக இடம்பெற்றிருக்கும்.
பார் கவுன்சில் தேர்தல் நடைபெறும் விதம் மற்றும் வாக்கு என்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷெரின் விளக்குகிறார்.

பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு எப்படி நடக்கும்?
1. உதாரணமாக, வாக்களிக்க தகுதி உள்ள 1 லட்சத்து 540 பேரில் சுமார் 70% வாக்குப்பதிவு நடக்கிறது என்றால், 70,378 வாக்குகள் பதிவாகும். அதில், 23 உறுப்பினர்களை தேர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் குறைந்தது 3,060 வாக்குகள் தேவை. முதன்மை விருப்பமாக தேர்வு செய்ததில் 3,060 வாக்குகள் பெற்றவர்கள் நேரடியாக வெற்றி பெறுவார்கள்.
2. யாருமே நேரடியாக 3,060 வாக்குகள் பெறவில்லை என்றால், கடைசி இடத்தில் இருப்பவருக்கு செலுத்தப்பட்ட வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் அவருக்கு முதன்மையாக (First preference) கிடைத்த வாக்குகளில் இருக்கும் இரண்டாம் விருப்பம் கணக்கில் எடுக்கப்படும்.
3. அவருக்கு இருக்கும் இரண்டாம் விருப்ப வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டுள்ளது என எண்ணப்படும். அதன்படி, 3,060 வாக்குகள் இந்த சுற்றில் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
4. அதைத்தொடர்ந்து, கடைசி இடத்தில் இருப்பவர் நீக்கப்பட்டு, அவருக்கு முதன்மையாக வாக்களித்தவர்களின் இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்படும். இரண்டாம் விருப்பத்தில் இருப்பவர் ஏற்கனவே நீக்கப்பட்டவராக இருந்தால் அந்த வாக்குச்சீட்டில் 3வது விருப்பத் தேர்வில் இருப்பவர் பெயர் பார்க்கப்பட்டு அவருக்கு ஓட்டு சேர்க்கப்படும்.
5. அதன்படி, 3,060 வாக்குகள் இந்த சுற்றில் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இது, மொத்தமாக தேர்வு செய்யப்பட உள்ள 23 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வரை தொடரும்.
பார் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு
பார் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கானவர்களை தேர்வு செய்வார்கள். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்கள் மற்றும் அட்வகேட் ஜெனரல் ஆகியோர் ஓட்டு போடுவார்கள். இதில், அதிக வாக்குகள் பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications