Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 5 வழக்கறிஞர்கள் கைது! கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.. பார் கவுன்சில் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராக் கொலை வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் உட்பட 19 பேர் கைதாகியுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Armstrong bar council Police

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது.

கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமாக பிரமுகர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடிக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கொலைக்கு பண உதவி செய்தது சம்போ செந்தில் தான் என்பதும், ஹரிஹரன் மூலமாக அந்த பணம் ஏற்கனவே கைதான அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில், காவல்துறையினர் தேடி வரும் சம்போ செந்திலுக்கு சிவா பண உதவி செய்ததாக கூறப்படுகிறது.

பலரிடம் மாமுலாக பெற்ற பணத்தையும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வழங்கப்பட்ட பணத்தையும் சம்போ செந்தில் தரப்புக்கு வழக்கறிஞர் சிவா வழங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது செல்போன் எண்கள் மற்றும் கூட்டாளிகளை ரகசியமாக காவல்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் தான் சிவா கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த வழக்கில் 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்,”காவல்துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 120 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இனி இடைநீக்கம் மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பதிவை நிரந்தரமாக நீக்குவது குறித்தும் பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மேலும், வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும் என்றதோடு, தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+