Barathi kannamma serial: அடேங்கப்பா... கண்ணம்மாவுக்கு இவ்ளோ கோவம் வருமா?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு வீட்டில் இருப்பவர்கள் என்ன சொல்லித் திட்டினாலும் கோவம் வராது.
இப்போ பாருங்க செம கோவம்..செம அடி.. இதைத்தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள் போலும்.
சரி யார் மேல கண்ணம்மாவுக்கு கோவம்? தன்னை கருப்பு கருப்பு என்று வெறுத்தவர்கள் மீதா? அதுதான் இல்லை.. இது சரியான கோவம்.. சரியான அடி!

அஞ்சலி வேலைக்காரி
கண்ணம்மாவை பழிவாங்க என்றே அவள் பிறந்த வீட்டில் சித்தி ஒரு வேலைக்காரியை அஞ்சலிக்கு துணை என்று அனுப்பி வைக்கறாங்க. அந்த வேலைக்காரி கண்ணம்மாவை மதிக்காமல் பேசுவது.. மதிக்காமல்; நடந்துக்கறது என்று இருக்க அவளை வைக்கிற இடத்தில் வைக்க வேண்டுமென்று சொல்லித் தருகிறாள் அறிவு.

கண்ணம்மாவின் பாரதிக்கு
கண்ணம்மாவின் பாரதிக்கு இரண்டு பெண்கள் போட்டி போடறாங்க. அதில் ஒருத்தியா இருந்தது கண்ணம்மாவின் சித்தி பெண் அஞ்சலி. இப்போது பாரதியின் தம்பி அகிலனை கல்யாணம் செய்துகொண்டாள். இருந்தும் கண்ணம்மா குடியைக் கெடுக்க நினைக்கிறாள்.

பாரதி வெண்பா
டாக்டருக்குப் படித்த வெண்பா படிச்ச போது பாரதியின் மீது ஆசை கொண்டது அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் இன்னும் நீடிக்கிறது. இவள் படிக்காத வெள்ளந்தியான கண்ணம்மாவை தனக்குப் போட்டியாக நினைத்து அவள் இடத்தில் தான் இருக்க நினைக்கிறாளாம். என்ன படிச்சு என்ன..புத்தி இப்படி போகிற மாதிரி கதை எழுதறாங்களே..

மாட்டினாள் வேலைக்காரி
வேலைக்காரி டாக்டரிடம் இந்த குடும்பத்தை கெடுக்கும் வேலை பற்றி போனில் பேசிக் கொண்டு இருக்க அதை கேட்டு விடுகிறாள் கண்ணம்மா. உடனே அருகில் வந்து நீ இந்த வீட்டுக்கு வரும்போதே நினைச்சேன். விஷப்பாம்பு வீட்டுக்குள்ளே வருதே யார் தலையயை கொத்த போகுதோன்னு.. இந்த குடும்பத்துக்கு ஒரு கெடுதல் நினைக்கறவங்களை நான் விடமாட்டேன்னு சொல்லி, வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்றா.
வேலைக்காரிநிம்மி கண்ணம்மாவை எதிர்த்து மரியாதை இல்லாமல் பேச பொளேர் என்று விடுகிறாள் ஒரு அடி. அப்ப்பா என்ன கோவம்!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications