விவாகரத்து அறிவிப்புக்கு பின்.. மோகினி டே பதிவிட்ட முதல் போஸ்ட்! என்ன சொல்லி இருக்காரு பாருங்க!
சென்னை: பிரபல பாசிஸ்ட் இசையமைப்பாளரான மோகினி டே தனது கணவரைப் பிரிந்து வாழ்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அதன் பிறகு சில நாட்கள் எந்தவொரு போஸ்ட்களையும் இவர் போடாமல் இருந்த நிலையில், இப்போது விவாகரத்துத் தொடர்பாக மற்றொரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
சமீப காலங்களாகவே பிரபலங்கள் விவாகரத்து செய்யும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி எனப் பல நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து பிரிந்து வாழ்வதாக அறிவித்துள்ளனர்.

மோகினி டே: இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பாசிஸ்ட்டான மோகினி டேவும் தான் கணவரை விட்டுப் பிரிந்து பிரிவதாக அறிவித்தார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றி வருபவர். இவர் தனது கணவரை விட்டு வாழப் போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
பாசிஸ்ட் இசையமைப்பாளரான மோகினி டேவுக்கு, இசை தயாரிப்பாளர், பாடகர் என்று பல முகங்களை உள்ளது. சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பாலோவர்ஸ் கூடன் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மோகினி டே, தனது இசை நிகழ்ச்சிகள் குறித்த போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்கிடையே கணவரைப் பிரிவதாக அவர் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது.
விளக்கம்: கணவரை விட்டுப் பிரிந்து வாழப் போவதாக அறிவித்த மோகினி டே அதன் பிறகு எந்தவொரு போஸ்ட்டையும் பதிவிடவில்லை. இதனால் இவரது விவகாரத்து குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. இதற்கிடையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், "என்னை நேர்காணல் எடுக்க வேண்டும் எனப் பலரும் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். எதற்காக நேர்காணல் கேட்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இதனால் நான் நேர்காணல் கேட்போரை மறுத்தே வருகிறேன். ஏனென்றால் எனக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற விருப்பமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்: எது தொடர்பாக இப்படிக் கூறியிருக்கிறார் என்று எந்தவொரு தகவலையும் அவர் பதிவிடாத நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் அவரது ரசிகர்கள் அவருக்குப் பக்கபலமாகவே இருந்து வருகிறார்கள். மோகினிக்கு ஆதரவாகப் பலரது போஸ்ட்களை இணையத்தில் பார்க்க முடிகிறது.
விவகாரத்து அறிவிப்பு: முன்னதாக மோகினி டே விவகாரத்துத் தொடர்பான தனது போஸ்ட்டில், "மார்க்கும் நானும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவித்துக் கொள்கிறோம். பரஸ்பரமாக இருவரும் சேர்ந்த எடுத்த இந்த முடிவை முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் இருவருக்கும் வெவ்வேறு விஷயம் பிடித்திருக்கிறது. இதனால் மனமுவந்து பிரிந்தே விடுவதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். இனி நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம்.
நாங்கள் இப்போது பல பிராஜெக்ட்களில் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்து வருகிறோம். அதை நினைத்து எப்போதும் பெருமைப்படுவோம். வரும் காலங்களிலும் தொடர்ந்து இணைந்து வேலை செய்வோம். இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாக இருக்க வேண்டுகிறேன். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுகிறேன்" என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications