"அந்த" ஒரு மணி நேரம்.. சத்தமே இல்லாத பவானிசாகர்..குழம்பி போன பூத் ஊழியர்கள்.. ஈரோட்டில் என்ன ஆச்சு?
பவானிசாகர் பேரூராட்சியில் ஒரு மணி நேரம் வாக்காளர்கள் ஓட்டுப்போட வரவில்லை
சென்னை: தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குகளை செலுத்த வாக்காளர்கள் மும்முரமாகி வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக பவானிசாகர் பேரூராட்சியில்..!
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடங்கியது
இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டம் - ஒழுங்கை பேணி காக்க 1.33 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

முன்கூட்டியே வந்த மக்கள்
சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆனால், அதற்கு முன்பேயே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.. 7 மணிக்கு ஒவ்வொருவராக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தொடங்கினர்.. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளும் படுபிஸியாகிவிட்டன.. ஆனால், பவானிசாகர் பேரூராட்சியில் மட்டும் சத்தத்தையே காணோம்.. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்காளர்கள்
பவானிசாகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 3390 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்... எனினும், வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலையே வந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து கொண்டனர்.. வாக்குப்பதிவும் தொடங்கியது.. அங்குள்ள வாக்குப்பதிவு தொடங்கி ஒரு மணி நேரமாகியும் வாக்காளர்கள் வரவே இல்லை.. இதனால் அங்குள்ள பூத்கள் வெறிச்சோடி காணப்பட்டது.. வாக்காளர்கள் எப்போது வருவார்களோ என்று அவர்களின் வருகைக்காகவே வாக்குச் சாவடி ஊழியர்கள் காத்து கிடந்தனர்.
Recommended Video


என்ன காரணம்?
பிறகு நேரம் ஒரு மணி நேரம் கழித்து ஒரு சில வாக்காளர்கள் மட்டுமே வந்து, வாக்களித்து விட்டு செல்கின்றனர்... இதன் காரணமாக மிகவும் மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வருகைக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதும், இதன் காரணமாக வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளதும், புதுவிதமான சூழலை ஈரோட்டில் ஏற்படுத்தி உள்ளது.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஒருவேளை இனிமேல் தான், வாக்காளர்கள் கிளம்பி வந்து ஓட்டுப்போடுவார்களா? அல்லது ஓட்டுப்போடும் ஆர்வம் குறைந்துவிட்டதா? பார்ப்போம்..!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications