ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் சரி, தண்டனையை அனுபவித்துதான் ஆகணும்.. துரைமுருகன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிதி மேலாண்மை குளறுபடிகள் நடந்ததாக கூறப்படும் விஷயத்தில் ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சரும், சட்டசபை அவை முன்னவருமான துரைமுருகன் கூறினார்.

தமிழக சட்டசபையில 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து துறை வாரியாக விவாதம் நடந்து வருகிறது. சட்டசபையில் நேற்று நிதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

Be it a governor or a lord, you have to suffer the punishment: says minister Duraimurugan

அட்ச பாத்திரம் திட்டம்: அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் அட்சய பாத்திரம் காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் தமிழக அரசின் திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்டதா அல்லது ஆளுநரின் முடிவு அடிப்படையில் செயல் படுத்தப்பட்டதா என தெரியவில்லை.

இந்த விஷயத்தில் ஆளுநரின் செயல்பாட்டை தொடாமல் நிதி மேலாண்மை பற்றி மட்டும் கூற விரும்புகிறேன். எந்த மாநிலமும் வழங்காத அளவுக்கு தமிழக ஆளுநருக்கு விருப்பவுரிமை நிதியையும், கூடுதல் சலுகைகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது என்றார்.

கடிதம் எழுதினார்: இதேபோல உறுப்பினர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் பிடிஆர் பேசுகையில்,"கடந்த ஆட்சி காலத்தில் ஆளுநரின் செயலாளர் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை முறையில்லாத கடிதம் என்றே நான் சொல்வேன். இது எப்படி ஜனநாயக நாட்டில் செல்லும். காரணமில்லாமல் ரூ.5 கோடி செலவுக்கு எப்படி வழங்க முடியும். ஜனவரி முதல் மார்ச் வரை 2 மாத செலவுக்கு ரூ.2 கோடி கேட்டிக்கிறார். அமைச்சர் கையெழுத்து இல்லாமல், அன்றைய நிதித் துறை செயலாளரே முடிவெடுத்து அந்த தொகையை வழங்கியுள்ளார். கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

எந்த மாநிலத்திலும் இல்லை: ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அட்சய பாத்திரம் திட்டத்துக்கு என்று சொல்லி, ஆளுநரின் வீட்டு கணக்குக்கு நிதி போயிருக்கிறது. அந்த திட்டத்துக்கு ரூ.4 கோடியே 49 லட்சம் கொடுக்கப்பட்டதாக கவர்னரின் செயலாளர் சொல்கிறார். ஆனால், அதற்கான கோப்புகள் இல்லை. 2021-ம் ஆண்டு புதிய ஆளுநர் வந்தபிறகு, 17 கோப்புகளின் அடிப்படையில் நாம் நிதி ஒதுக்கி உள்ளோம். சுதந்திர தின விழாவுக்கு ரூ.25 லட்சம், சுற்றுப் பயணத்துக்கு ரூ.15 லட்சம், அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு ரூ.25 லட்சம், குடியரசு தினவிழாவுக்கு ரூ.20 லட்சம் என நிதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த மாநிலத்திலும் உள்ள ஆளுநர்களுக்கும் இவ்வளவு நிதியும், கூடுதல் சலுகையும் வழங்கப்படவில்லை. எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு அந்த தொகையை கேட்கக்கூடாது என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.

வேலுமணி விளக்கம்: இந்நிலையில் அதிமுக கொறடா வேலுமணி கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்தார். அவர் கூறும் போது, அட்சய பாத்திரம் என்ற தன்னார்வ அமைப்பினர் காலை உணவுத் திட்டத்துக்காக இடம், ஒருங்கிணைந்த சமையல் கூடம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசிடம் கேட்டனர். அது நல்ல திட்டம் என்பதால் அதற்கான இடங்களை வழங்கினோம் என்றார்.

Be it a governor or a lord, you have to suffer the punishment: says minister Duraimurugan

ஆளுநராக இருந்தாலும்: அவை முன்னவர் துரைமுருகன் கூறும் போது, உங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தைப் பற்றி குறைகூறவில்லை. நிதி மேலாண்மையில் உள்ள குளறுபடிகளைத்தான் நிதி அமைச்சர் விளக்கி இருக்கிறார். இந்த விவகாரத்தில் ஆளுநராக இருந்தாலும் சரி, ஆண்டவனாக இருந்தாலும் சரி அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+