ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! 2 வருடங்களுக்குப் பின் முக்கிய சேவை மீண்டும் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் நிலையில், இந்தியன் ரயில்வே தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2022. மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது.

Bedroll facility restored in trains of Indian railways

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டன. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் நிலையில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இப்போது கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நாடு மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கிச் சென்று வருகிறது. கொரோனா காலத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளிட்ட பொது பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படாமலேயே இருந்தது.

இதனால் சிறிய தூரம் பயணம் செய்வோரும் வேறு வழியின்றி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்தச் சூழலில் சமீபத்தில் தான் ரயில்களில் பொது பெட்டிகளை இணைக்கும் முடிவை இந்தியன் ரயில்வே எடுத்தது.

கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன்பு, ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விரிப்புகள் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விரிப்புகள் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல்வேறு ரயில் கோட்டங்களிலும் விரிப்புகள் வழங்கும் முறை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+