மசூதியில் 5 வயது சிறுமியை சீரழித்த மவுலி.. சிக்கவைத்த 3ம் கண்.. 2 ஆண்டுக்கு பின் கைதானது எப்படி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு 22 வயது நிரம்பிய மவுலி ஒருவர் மசூதிக்குள் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் 2 ஆண்டுகள் கழித்து அந்த மவுலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் கைதான மவுலி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. பெலகாவி மாவட்டம் முருகோடு பகுதியில் மசூதி ஒன்று இருக்கிறது. இந்த மசூதியில் மவுலியாக 22 வயது நிரம்பிய துஃபாயில் அகமது தாதாஃபீர் இருக்கிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த மசூதியில் மவுலியாக இருக்கிறார். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவியது.
மசூதிக்குள் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்வது வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்த பலரும் கடும் சினம் கொண்டனர். மசூதிக்குள் வைத்து செய்யும் காரியமா இது? உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கொந்தளித்தனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்டபோது இந்த சம்பவம் முருகோடு மசூதியில் நடந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு மவுலியாக இருக்கும் துஃபாயில் அகமது தாதாஃபீர் தான் 5 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதோடு இந்த சம்பவம் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி நடந்த நிலையில் சம்பவம் பற்றி வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்திவு செய்த போலீசார் மவுலி துஃபாயில் அகமது தாதாஃபீரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக எஸ்பி பீம்சங்கர் குலாத் கூறுகையில், ‛‛சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு வழியாக இந்த சம்பவம் பற்றி அறிந்து கொண்டோம். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் சம்பவத்தை கூறும் நபரின் வீடியோ உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வீடியோவில் இருக்கும் கட்டடத்தை முதலில் அடையாளம் கண்டோம். அது மசூதி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மசூதி நிர்வாகத்தினரை அணுகி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை கண்டுபிடித்தோம். இருப்பினும் சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க தயங்கினர். இதனால் குற்ற சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு உதவியுடன் சார்பில் புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
கைதான துஃபாயில் அகமது தாதாஃபீர் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். பாகல்கோட்டை மாவட்டம் மாலேபூர் கிராமத்தை சேர்ந்தவர். சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் அவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மாலேபூர் கிராமத்தில் பதுங்கிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர். காலை வேளையில் போலீசார் சென்றார் அவர் தப்பிக்கலாம் என்றால் இரவு நேரத்தில் சென்று போலீசார் கைது செய்துள்ளனர். கைதான மவுலி தற்போது பெலகாவி இண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications