சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: ப.சிதம்பரத்திடம் சிக்கிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்-இடைவிடாமல் ட்விட்டரில் வெளுத்து கட்டு!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் அறிவிப்புகளைப் பார்க்கும் போது இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே பற்றாக்குறை போல என நினைக்க வேண்டியிருக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பல மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்கா, பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சுமார் 60 ஆயிரம் எனில் இந்தியாவில் 2.60 லட்சம் என்கிற நிலை உள்ளது.

கொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா? கொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா?

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

அதேபோல் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் கிடுகிவென அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவைகளுக்கு பற்றாக்குறையாக இருக்கிறது என பல மாநிலங்கள் அடுக்கடுக்காக புகார் கூறி வருகின்றன.

மோடி மீது உத்தவ் புகார்

மோடி மீது உத்தவ் புகார்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச முயற்சித்தேன்; அவரோ மேற்கு வங்க தேர்தலில் தாம் பிசியாக இருக்கிறேன் என கூறிவிட்டார் என பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இதனால் நாடு முழுவதும் கொரோனா பரவல் படுமோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

ப..சி. ட்வீட்

ப..சி. ட்வீட்

இந்த நிலைமை தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்கிற அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்படும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் எந்த பற்றாக்குறையுமே இல்லை என்கிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு பற்றாக்குறை?

கொரோனா நோயாளிகளுக்கு பற்றாக்குறை?

கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன், படுக்கைக்ள், மருத்துவர்கள், செவிலியர்கள் எதற்குமே பற்றாக்குறை இல்லை என மத்திய அமைச்சர் சொல்வதை நம்புவோம். இங்கே கொரோனா நோயாளிகளுக்குத்தான் பற்றாக்குறை இருக்கிறது போல.. பாஜகவின் ராஜ்ஜியத்தின் மேற்கு வங்கத்தை இணைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்திலும் கொரோனா குறித்து கொஞ்சமாகவேனும் பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி.. இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதெப்படி சொல்லலாம்?

அதெப்படி சொல்லலாம்?

இதனைத் தொடர்ந்து மாலையில் ப. சிதம்பரம் பதிவிட்ட ட்வீட்டுகள்: டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா முதல்வர்கள் எல்லாம் கொரோனா தடுப்பூசிகள், படுக்கைகள் பற்றாக்குறை இருக்கிறது என்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டுகோள் வைக்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே! இவை எல்லாம் பொய்யா? அப்புறம் எப்படி நீங்க பற்ராக்குறையே இல்லை என சொல்லலாம்? என எகிறி உள்ளார்.

English summary
Senior Congress Leader P Chidambaram Tweets that " Believe the minister, there is no shortage of vaccines, oxygen, Remdisvir, hospital beds, doctors and nurses. There is only a shortage of patients!.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X