அசத்தல் திட்டம்.. ரூ.10 லட்சம் கடனை தரும் வசதி! 1 லட்சம் பெண் தொழிலதிபர்களா? அரசு குட் நியூஸ் வருது
சென்னை: பெண்கள் தங்களுடைய சொந்த காலில் நிற்கவும், சுய சம்பாத்தியத்தில் ஈடுபட்டு வாழ்க்கை தரத்தில் முன்னேறவும், தமிழக அரசு எத்தனையோ உதவிகளை செய்து தந்து கொண்டிருக்கிறது.. இதில் ஏராளமான கடனுதவி திட்டங்களும் உண்டு.. இதன்மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பலனடைந்து வருகிறார்கள். அந்தவகையில், மீண்டும் ஒரு நற்செய்தி பெண்களுக்கு வரப்போகிறதாம். இந்த கடனுதவி திட்டம் குறித்துதான் தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
தொழில்முனைவோர்களாக விரும்பும் பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்குமே கடனுதவி வழங்கும் விதமாக பல்வேறு விதமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், முன்னேற்றத்தையும், தந்து வருகிறது.

காலக்கெடு நிர்ணயம்
சமீபத்தில்கூட, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக புதிய குழுக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு சாபாக குழுக்கடன்கள் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் மொத்தமாக 6 சதவீதமாகும்.
இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்கு இரண்டரை ஆண்டுகள் காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடனை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி சுய உதவிக்குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அத்துடன் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் மட்டும் குழுவில் இருக்க வேண்டும்.
கடன் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக வழங்கப்படும் ரூ.15 லட்சம் குழுக்கடனை பெறுவதற்கு 18-60 வரை வயது உடையவராக இருக்க வேண்டும். அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றெல்லாம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, தலா, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதற்கான கருத்துரு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்னும் சில தினங்களில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட போவதாகவும் கூறப்படுகிறது.
5 ஆண்டுகளில் 1 லட்சம் பெண்கள்
பெண்கள் சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற, அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் வருடத்துக்கு 20,000 பேர் என 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை, தொழில் முனைவோராக்கும் திட்டமும் கையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த திட்டத்துக்குதான் தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பெண்களுக்கு மிக குறைந்த வட்டியில், 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்படும்..
விரைவில் குட்நியூஸ்
20 சதவீதம் அரசு மானியம் வழங்குவதற்காக, நடப்பாண்டு பட்ஜெட்டில், 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதை தவிர, திறன் மேம்பாட்டு பயிற்சி, தயாரிப்புகளை விற்க ஆலோசனை உள்ளிட்ட உதவிகளும் வழங்கப் பட உள்ளதாம்..
எனவே, திட்டத்திற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்ததுமே விண்ணப்பம் பெறப்பட்டு, பயனாளிகள் விரைந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று சிறு தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications