ஆண் குழந்தைகளுக்கு அருமையான திட்டம்.. பொன்மகன் சிறுசேமிப்பு.. எளிய முதலீட்டில் சூப்பர் லாபம் பெறலாம்
சென்னை: உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்காகவும், வளமான வாழ்க்கைக்காகவும், துவங்கப்பட்டிருக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா? இந்த சிறுசேமிப்பு திட்டத்தை எப்படி துவங்குவது தெரியுமா? இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன தெரியுமா? தமிழக மக்களின் பேராதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற்றிருக்க என்ன காரணம் தெரியுமா? இதோ சுருக்கமாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டமாகும்.. தமிழகத்திலேயே ஆண்களுக்கு மட்டும் இருக்கும் சிறுசேமிப்பு திட்டம் இதுவாகும். ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பதற்காக கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது இந்த அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்.

வரவேற்பு: பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டம் இருப்பதைப் போல, ஆண் குழந்தைகளுக்காக இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தினை, இந்திய தபால் துறைதான் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் பெற்றோர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். குறைந்தபட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
வட்டி விகிதம்: இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 9.7 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. எனினும், வட்டி விகிதம் வருடா வருடம் மாறுபடும். இத்திட்டத்தில் மாதம் ரூபாய் 500 செலுத்தும் ஒரு நபர் மொத்த முதிர்வு காலத்தின் இறுதியில் ரூபாய் 1.83 லட்சம் தொகையினை பெற முடியும்.. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள் என்றாலும், அடுத்த 5 வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்து கொள்ளலாம்.
அதாவது, முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 வருடங்கள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இந்த திட்டத்தின் கூடுதல் அம்சமாகும். ஆண் குழந்தை வளர்ந்து மேஜர் ஆனதுமே, சம்பாதித்த வட்டி உட்பட முழுத்தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும்.
யார் யார் துவங்கலாம்: ஆண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது. 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்ததிட்டத்தில் கணக்கை துவங்கலாம். 10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு கணக்கு தொடங்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரிலேயே, பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்... அதாவது பெற்றோர் பெயரிலும் குழந்தை பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும்.
எப்படி துவங்குவது: தமிழ்நாட்டில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.. தமிழகத்தில் 2 ஆயிரம் தலைமை-துணை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். கணக்கு திறந்த பிறகு அந்த கணக்கை தமிழகமும் முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கு சில ஆவணங்கள் தேவைப்படும்.. குறிப்பாக, தபால் நிலையங்களில், விண்ணப்ப படிவத்தை நிரப்பி தர வேண்டும். மேலும், ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், ஆண் குழந்தையின் போட்டோ, பெற்றோர்/பாதுகாவலரின் அடையாள சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்ட், பான் கார்டு, போட்டோ போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். இவைகளை விண்ணப்பித்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆரம்ப வைப்புத்தொகை வெறும் ரூ.500 செலுத்தினால், குழந்தைக்கு பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
பாதுகாப்பானவை: அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள இதுபோன்ற சிறுசேமிப்புகள், எப்போதுமே பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் திகழ்ந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், அதிக வட்டி விகிதங்கள், கடன் வசதி இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளதால், பொதுமக்கள், இதுபோன்ற சிறுசேமிப்புகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications