பொன்மகன் டூ செல்வமகள் சேமிப்பு திட்டம்.. அஞ்சலக வங்கியில் அசத்தல் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் சேவை
சென்னை: செல்வமகள் சேமிப்பு, பொன்மகன் போன்ற சேமிப்பு திட்டங்கள், ஆண், பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும்... இந்த செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த வசதிகள் உண்டா? 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு திட்டத்தை ஆன்லைனில் பெறும் வசதி உண்டா? இவைகளை பற்றின தகவல்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
இந்திய அஞ்சலக வங்கியானது பல்வேறு புதுமைகளையும், சேவைகளையும் செய்து வருகிறது.. இதன்மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் நேரடியாக பலன்களை பெற்றும் வருகிறார்கள்.. அதாவது கடந்த 2018ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

செல்வமகள் - பொன்மகன் சேமிப்பு
தமிழ்நாட்டில் புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் உதவித்தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம் /உதவித்தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும்.
இதில், தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, செல்வமகள் சேமிப்புத் திட்டமாகும்.. பெண் குழந்தைகளின் சேமிப்பை ஊக்கப்படுத்தி, அவர்களின் உயர்கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவைப்பு நிதி
அதாவது குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் என்பதே இந்த திட்டத்தின் சாராம்சமாகும்.. இதன்மூலம் 11,16,815 வரை சேமிக்க முடியும். இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச தொகையாக நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அதேபோல, தமிழகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆண்களுக்கு மட்டும் இருக்கும் மற்றொரு சிறுசேமிப்பு திட்டமாகும்.. பாதுகாவலர்: 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்... 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை துவங்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் குழந்தைக்கு கிடையாது
அஞ்சலக சேமிப்பு திட்டம்
இதுபோல, அனைத்து அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலும், விவசாயிகளுக்கான நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கணக்குகள், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டக்கணக்குகள், முதியோர் உதவி தொகை கணக்குகள் போன்றவற்றிற்கும் அரசு மானியம் /உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் உண்டு.
எனினும், ஆரம்ப காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது.. எனவே, இதுபோன்ற சேமிப்பு கணக்குகளுக்கு வாரிசுதாரரை நியமிப்பதன் மூலம், கணக்கை துவங்கியவர் இறந்துவிட்டாலும்கூட, அவரது வங்கிக் கணக்கிலுள்ள தொகை, எந்தவிதமான சிக்கலுமின்றி வாரிசுதாரர்களுக்கு வந்து சேர்கிறது..
மொபைல் பேங்க்கிங்
எனவேதான், அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசுதாரரை நியமிக்கும் வசதிகள், ஒவ்வொரு மாநில அஞ்சல் அலுவலகங்களில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில், இதற்கென உள்ள பிரத்யேக ஆப் மூலமாகவும்,கணக்குதாரர்கள் வாரிசு நியமனம் செய்யலாம், அல்லது மாற்றமும் செய்யலாம்.
இதே செயலி மூலம், தங்களது அஞ்சலக வங்கி கணக்குகளில் ஆதார் நம்பரையும் இணைத்து, அரசின் மானிய தொகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.. வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கையும் இணைத்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
காப்பீட்டு வசதி - யுபிஐ குறியீடு
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கிடைத்துவிட்டால், செல்வமகள், தங்கமகன் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கும், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கும், எளிதாக பணம் செலுத்த முடியும்..
அதேபோல, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் 555 ரூபாய் மற்றும் 755 ரூபாய் என்ற குறைவான பீரிமிய தொகையில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... மேலும், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வசதியும் இதில் உள்ளது.. கடை வைத்திருக்கும் வியாபாரிகள், யுபிஐ குறியீடு மூலம் பணம் பெறும் வசதியும் இதில் அறிமுகமாகியிருக்கிறது.
பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் 555 ரூபாய் மற்றும் 755 ரூபாய் என்ற குறைவான பீரிமிய தொகையில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... மேலும், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வசதியும் இதில் உள்ளது.. கடை வைத்திருக்கும் வியாபாரிகள், யுபிஐ குறியீடு மூலம் பணம் பெறும் வசதியும் இதில் அறிமுகமாகியிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications